மீண்டும் ஒர் அரிய வாய்ப்பு: பொதுத்துறை வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 181 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு
மீண்டும் ஒர் அரிய வாய்ப்பு: பொதுத்துறை வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 181 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 181

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Fire Officer - 01
பணி: Economist - 06
பணி: Security Officer - 19
பணி: Integrated Treasury Officers - 15
பணி: Credit Officers -122
பணி: Forex Officer -18

வயதுவரம்பு: 23 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் பயர் இன்ஜினியரிங்கில் பிரிவில் பி.இ முடித்தவர்கள், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், MBA, PGDBA, PGDBM, PGPM,  PGDM, CA, ICWA, CFA, FRM முடித்து ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விபரங்களை இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையம்: புதுதில்லி, சண்டிகர், லக்னோ, கொல்கத்தை, பாட்னா, புவனேஸ்வர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, போபால், மும்பை, நேவி மும்பை, கிரேட்டர் மும்பை, தானே, அகமதாபாத்  

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2019

மேலும் முழுமையான விவரங்கல் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/DETAILED-NOTIFICATION-ENGLISH-recruitment-110319.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com