விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் அதிகாரி வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் அதிகாரி வேலை


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இன்றை கடைசி நாளாகும். 

நிர்வாகம்: Insurance Regulatory and Development Authority of India(IRDAI)

மொத்த காலியிடங்கள்: 45

பணி: Officers on Special Duty(OSD)
1. Actuarial - 01
2. Accounts - 03
3. General - 06
4. General Estates - 01
5. IT - 03
6. Legal - 02
7. Life - 13
8. Non-Life - 15

சம்பளம்: மாதம் ரூ.35,150 - 86,300

வயதுவரம்பு: 38 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் Fellow of Insurance Institute of India-ல் தேர்ச்சி பெற்று பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும். 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை படிப்புடன் FCA, FICWA, FCS,CFA தேர்வில் தேர்ச்சி பெற்றுவர்கள், ஐடி, சிஎஸ்இ பிரிவில் பி.டெக், எம்.எஸ் அல்லது எம்.டெக், எம்.எஸ்சி முடித்தவர்கள், சட்டத்துறையில் பட்டம் பெற்று பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், தனிபட்ட திறன் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.irdai.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அனைத்து இணைத்து விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Executive Director (Gen), Insurance Regulatory and Development Authority of India, Survey No.115/1, Financial District, Nanakramgudu, Hyderabad - 500 032, Telengana.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irdai.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com