வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர்கள் வேலை

25th Jun 2019 02:07 PM

ADVERTISEMENT

அனைவராலும் இ.பி.எப்.ஓ. என அழைக்கப்படும் மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள 280 உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத பட்டதாரி இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும். 

பணி: Assistant 

காலியிடங்கள்: 280

சம்பளம்: மாதம் ரூ.44,900

ADVERTISEMENT

வயது வரம்பு: 25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.epfindia.gov.in அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயனடையவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019

ADVERTISEMENT
ADVERTISEMENT