வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

அண்ணா பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

Published: 12th June 2019 01:17 PM


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள தற்காலிக ஆசிரியர் பணி சார்ந்த பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 71

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering - 21
2. Geo-Informatics Engineering - 08
3. Mechanical Engineering - 04
4. Computer Science and Engineering / Information Technology - 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

5. Mathematics - 14
6. Physics - 06
7. English - 15 

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் எம்.எஸ்சி, எம்.பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Additional Registrar and Director, Centre for Constituent Colleges, Anna University, Chennai - 600 025” 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Teaching%20Fellows.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டெட் இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு  
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி