வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

RITES நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை

Published: 11th June 2019 01:57 PM


குர்கானில் செயல்பட்டு வரும் ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Assistant(HR)

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 66,000 

வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இந்தியில் நிமிடத்திற்கு 20 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டெட் இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு  
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி