மத்திய அரசில் வேலை வேண்டுமா? எல்லை சாலை கழகத்தில் 778 காலியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ என அழைக்கப்படும் எல்லை சாலைகள் கழகத்தில் காலியாக உள்ள 778 ஓட்டுநர், எலக்டிரீசியன், மெக்கானிக், மல்டி
மத்திய அரசில் வேலை வேண்டுமா? எல்லை சாலை கழகத்தில் 778 காலியிடங்கள் அறிவிப்பு


மத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ என அழைக்கப்படும் எல்லை சாலைகள் கழகத்தில் காலியாக உள்ள 778 ஓட்டுநர், எலக்டிரீசியன், மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 778

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: DVRMT - 388
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Electrician -101
பணி: Veh Mechanic - 92
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், எலக்ட்ரீசியன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
வயதுவமர்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

பணி: Multi Skilled Worker (Cook)  - 197
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 39,900

கட்டணம்: பொது பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பிசி பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை Commandant, GREF Centre, பொது கணக்கு எண் 1182905409-ல் State Bank of India, Khadki Branch Pune-ல் கணக்கில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune - 411 015 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.bro.gov.in அல்லது http://bro.gov.in/WriteReadData/linkimages/9558409500-Untitled.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.07.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com