வியாழக்கிழமை 27 ஜூன் 2019

ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா..? 

Published: 06th June 2019 01:47 PM


ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
பணி: Junior Assistant/Clerk

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540

வயதுவரம்பு: 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.700. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி கார்டு மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.repcobank.com/uploads/career/6.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.06.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு!
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை
வேலை... வேலை... வேலை... இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலை
நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி: ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பட்டதாரிகளுக்கு பாதுகாப்புப்படையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!