தமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 475 பொறியியல் பணியிடங்களுக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’ -க்கான
தமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 475 பொறியியல் பணியிடங்களுக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’ -க்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 475
பணி: Assistant Electrical Inspector 
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Engineer (Agricultural Engineering) 
காலியிடங்கள்: 94
பணி:  Assistant Engineer(Civil), (Water Resources Department,PWD)
காலியிடங்கள்: 120
பணி: Assistant Engineer(Civil), (Buildings, PWD) 
காலியிடங்கள்: 73 
பணி: Assistant Engineer(Electrical) (PWD)
காலியிடங்கள்: 13
பணி: Assistant Director of Industrial Safety and Health
காலியிடங்கள்: 26
பணி: Assistant Engineer (Civil) (Highways Department) 
காலியிடங்கள்: 123
பணி: Assistant Engineer (Fisheries)
காலியிடங்கள்: 03
பணி: Assistant Engineer (Civil) (Maritime Board)
காலியிடங்கள்: 02
பணி: Junior Architect
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம்,  இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டண விவரம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவை செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com