திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தமிழக அரசில் உதவி சுற்றுலா அதிகாரி வேலை வேண்டுமா? 

Published: 30th July 2019 03:03 PM


சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலா துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவி சுற்றுலா அதிகாரி 

காலியிடங்கள்: 42

தகுதி: டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கூடுதலாகத் தமிழக அரசின் கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate course in Computer on Office Automation) அல்லது அதற்கு இணையாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் கட்டுப்பாடு கிடையாது. 

கட்டணம்: விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக 100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். 

தேர்வுசெய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் சுற்றுலா, பயணம் தொடர்பான பாடத்தில் இருந்து 300 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் கொள்குறி வகையில் இடம்பெற்றிருக்கும். 

நேரடியாக உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியில் சேருவோர் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1), சுற்றுலா அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : job opportunities opportunities jobs Recruitment Assistant Tourist Officer tnpsc tngov உதவி சுற்றுலா அதிகாரி 

More from the section

மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்:  ஆக. 31-க்குள்  விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு முகாம் இன்று முதல் முன்பதிவு: தமிழக அரசு ஏற்பாடு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை
வேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை மெட்ரோ ரயில் நிறுவன்ததில் வேலை