திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ரயில்வேயில் பொறியாளர் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Published: 24th July 2019 02:44 PM


இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 5 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: JR Technical Associate (Electrical)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 30,000

வயதுவரம்பு: பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36 வயதிற்குள்ளும், எஸ்டி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை "Sr.DFM/SUR" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் கையெப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள், டி,டி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Sr.DFM/SUR, Central Railway, Divisional Railway Manager's Officer, Modikhana, Solapur - 413 001.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 14.08.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்:  ஆக. 31-க்குள்  விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு முகாம் இன்று முதல் முன்பதிவு: தமிழக அரசு ஏற்பாடு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை
வேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை மெட்ரோ ரயில் நிறுவன்ததில் வேலை