என்.சி.சி. வீரர்களுக்கு இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் பணி

இந்திய ராணுவத்தில் என்.சி.சி. 47-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் இளங்கலை பட்டம் பெற்ற 55 என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான
என்.சி.சி. வீரர்களுக்கு இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் பணி


இந்திய ராணுவத்தில் என்.சி.சி. 47-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் இளங்கலை பட்டம் பெற்ற 55 என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணியிடம்: சென்னை 
மொத்த காலியிடங்கள்: 55. இதில் 5 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.     
வயது வரம்பு: 19 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.06.1995 மற்றும் 01.06.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன்  ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். முதல் 2 ஆண்டு படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு குழு தேர்வு, உளவியல் தேர்வு என நிலை-1, நிலை-2 என இரு நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவர்களுக்கு இறுதியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.  49 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in  என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NCC_47.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com