திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

வேலை வேண்டுமா? கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

Published: 10th July 2019 01:21 PM


கேரளாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ரிகர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 366

பணி: ரிகர் - 217

பணி: எலக்ட்ரீசியன் - 149 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிகர் என்ஏசி பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் ரிகர் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் எலக்ட்ரீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.07.2019 ஆம் தேதி அடிப்படையில் 18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2019 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.08.2019 (உத்தேசிமானது) 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய mazagondock.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்:  ஆக. 31-க்குள்  விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு முகாம் இன்று முதல் முன்பதிவு: தமிழக அரசு ஏற்பாடு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை
வேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை மெட்ரோ ரயில் நிறுவன்ததில் வேலை