அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் நிரப்பப்பட உள்ள 196 பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 196
பணி: பேராசிரியர் - 46
பணி: கூடுதல் பேராசிரியர் - 38
வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவி பேராசிரியர் - 56
பணி: இணை பேராசிரியர் - 56
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்.டி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimspatna.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019