செவ்வாய்க்கிழமை 21 மே 2019

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? 

By ஆர். வெங்கடேசன்| Published: 23rd February 2019 04:11 PM

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் காலியிடம் மற்றும் உத்தேசமான காலியிடங்களான 74 சுருக்கெழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அமினா, அலுவலக உதவியாளர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன.  

மொத்த காலியிடங்கள்: 74

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: சுருக்கெழுத்தர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அல்லது முதுநிலை மற்றும் இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 
பணி: தட்டச்சர்

காலியிடங்கள்: 09
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பகலாம். 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம்:  19,500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: முதுநிலை அமினா
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.19.500 - 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: இளநிலை அமினா
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.19.000 - 60,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: பிராசஸ் எழுத்தர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: காவலர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30, 32,35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/chennai  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் ஆளறிச்சான்றிதழுடன் கலந்துகொள்ள வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
தலைமை நீதிபதி,
சிறுவழக்குகள் நீதிமன்றம்,
உயர்நீதின்ற வளாகம்,
சென்னை -104 

அனைத்து தகவல் பரிமாற்றங்களும் (தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு விண்ணப்பம் ஏற்ட்டது அல்லது மறுத்தப்பட்டது) போன்ற அனைத்து விவரங்களும் www.districts .ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்துகொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற https://districts.ecourts.gov.in/sites/default/files/Paper%20publication%202019%20final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடை தேதி: 08.03.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை
எல்ஐசி-ல் 1,753 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை வேண்டுமா..?