குரூப் 2 முதன்மைத் தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றம்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான விடைத் தாளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. 


குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான விடைத் தாளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் கடந்த டிசம்பர் 17-இல் வெளியிடப்பட்டன. முதன்மை எழுத்துத் தேர்வு வரும் சனிக்கிழமை 15 மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpscexams.net)  வெளியிடப்பட்டுள்ளது.
விடைத்தாளில் மாற்றம்: விவரித்து விடை எழுதும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை முதன்மை எழுத்துத் தேர்வுக்கு கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை தனித்தனியே வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள  முதன்மை எழுத்துத் தேர்வுக்கு கேள்வி மற்றும் விடைத்தாள் இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே விடைப் புத்தகமாக வழங்கப்பட உள்ளது. இந்த விடை புத்தகத்தில் ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியே அச்சிடப்பட்டு அந்தக் கேள்வியின் கீழே விடையளிப்பதற்கான போதிய இடமும் வழங்கப்பட்டிருக்கும். தேர்வர்கள் அந்தந்த கேள்விக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விடையளிக்க வேண்டும்.
விடையளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர ஏனைய இடங்களில் எழுதப்படும் விடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. எனவே, தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விடையளிக்க வேண்டும் என்பதால்  விடையளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் அடித்தல், திருத்தல் ஏதுமின்றி விடையளிக்க வேண்டும் தேர்வு முடிந்த ஓரிரு நாள்களில் மேற்படி தேர்வின் வினா விடைப் புத்தகத்தின் மாதிரி நகல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com