வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

3rd Dec 2019 12:30 PM | ஆர். வெங்கடேசன்

ADVERTISEMENT


எல்ஐசியின் ஒரு அங்கமான ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 61

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Agriculture Officer Gr.B - 40
தகுதி: Agriculture,Horticulture, Veterinary Science,Fisheries, DairyTechnology & Animal Husbandry போன்ற ஏதாவதொரு துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Transaction Monitoring Team - Head (Grade D) - 01
தகுதி: CA,MBA அல்லது  Certified Fraud Examiner (CFE)பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Faculty -Behavioural Sciences(Grade D) - 01
தகுதி: Psychology துறையில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ படிப்படன் 10 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Fraud Risk Management- Fraud Analyst (Maker) Gr.B - 14
 தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Fraud Risk Management - Investigator (Checker)Gr.C - 05
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.700,  எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.idbibank.in என்ற இணையதளத்தின்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Specialist-Officers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2019

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT