வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா..? 

By ஆர்.வெங்கடேசன்| Published: 23rd August 2019 07:07 PM


மாவட்ட சுகாராத சங்கம் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், சென்னை மாவட்டம், 11 மாத ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும் கீழ்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: மருத்துவ அலுவலர் - DTC
காலியிடங்கள்: 02

பணி: மருத்துவ அலுவலர் மருத்துவக் கல்லூரி
காலியிடங்கள்: 02

பணி: முதுநிலை மருத்துவ அலுவலர் - DR-TB மையம்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், சிஆர்ஆர்ஐ முடித்திருக்க வேண்டும். முன்னுரிமைத் தகுதி: டிப்ளமோ, எம்டி பொது சுகாதாரம், சுவாச மருத்துவம், இன்டர்னல் மருத்துவம், சமூக மருத்துவம், DTCD, பொது சுகாராத்தில் முதுநிலை, டிபி மற்றும் நெஞ்சக நோய்கள், ஒரு ஆண்டு RNTCP அனுபவம், அடிப்படை கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15
தகுதி: அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
முன்னுரிமைத் தகுதி: காசநோய் சுகாதாப் பார்வையாளர் சான்றிதழ், அரசு அங்கிகரிக்கப்பட்ட இளங்கலைப்பட்டம், சமூகப்பணிகள் (அ) மருத்துவ சமூகப்பணிகள், சுகாதாரப் பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை காசநோய் ஆய்வக மேலாளர் 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், மருத்துவ ஆய்வக தொழில்நுடப் வல்லுனர் பட்டயம், நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு RNTCP ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆய்வக தொழில்நுடப் வல்லுனர்
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.10000
தகுதி: மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லனர் பட்டயம். DME, TN பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு RNTCP அனுபவம் அல்லது சளிப்பரிசோதனை, 2 மாத கணினி சான்றிதழ், இளநிலைப்பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பணி: TB சுகாதாரப் பார்வையாளர் 
காலியிடங்கள்: 09
தகுதி: 10, +2 மற்றும் MPHW,ANM, சுகாதாரப்பணியாளர், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். MPHW பயிற்சிப் பாடம் முடித்திருந்தால் முன்னுரிமைத் தகுயாக கருதப்படும். 

பணி: கணினி இயக்குபவர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: 10, +2 மற்றும் அரசு அங்கிகரிக்கப்பட்ட கணினி பட்டயம், தமிழ்(ம) ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆற்றுபடுத்துனர் - DRTB மையம் 
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: சமூகப் பணி, சமூகவியல், உளவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் ஆற்றுப்படுத்துனராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: கணக்காளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: வணிகவியல் துறையில் இளநிலைப்பட்டம், இரண்டு ஆண்டு இரட்டைப்பதிவு அனுபவம், தணிக்கை பரிச்சையம், எம்பிஏ, நிதியியல் மேலாண்மையில் முதுநிலை பட்டயம், கணக்கியல் மென்பொருளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: DRTB மையம் புள்ளிவிவர உதவியாளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,000
தகுதி: இமைந்த பாடமாக புள்ளிவிவரகங்களுடன் பட்டம் பெற்றவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன். எம்பிஏ, நிதியியல் மேலாண்மையில் முதுநிலை பட்டயம், கணக்கியல் மென்பொருளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி: திட்ட அலுவலர் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(RNTCP), மாவட்ட காசநோய் மையம், 26, புளிந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600 012

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in  என்ற இணையதளத்தில், http://www.chennaicorporation.gov.in/images/RNTCP_Tamil_NewspaperAd.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.09.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Greater Chennai Corporation invites Chennai Corporationrecruitment Laboratory Supervisor Lab Technician Posts சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் வேலை employment news in tamil employment news in chennai today employment news in tamil late

More from the section

கிராம சுகாதாரச் செவிலியர் பணி: செப்.24-இல் சான்றிதழ் சரிபார்ப்பு
வாய்ப்பு... வாய்ப்பு... வாய்ப்பு... ஆவின் பொருட்கள் விற்பனைக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
அரசு வேலைவாய்ப்பு: முற்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு கோரி பொது நல மனு தாக்கல்
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 176 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி இதுதான்!
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!