திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

வேலை... வேலை... வேலை...  தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

Published: 06th August 2019 10:44 AM


தெற்கு மத்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Sport Persons (Groups-C)

காலியிடங்கள்: 21

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாவட்ட, பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், விளையாட்டு தகுதி, விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு ரூ.250. இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் Secunderabad-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கோடிட்ட Bank Draft , IPO ஆக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்திற்கான டி.டி மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Senior Personnel Officer (Engg. & Rectt), Room No.412, Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Rail Nilayam, Secunderabad - 500 025 (Telangana).

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in/cris/uploads/files/1564490633289-sports_quotq.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ள வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.08.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : வேலை வாய்ப்பு Employment News vacancies Recruitment 2019 employment news in tamil velai vaippu seithigal 2019 South Central Railway Sports Persons Posts South Central Railway Recruitment 2019 velaivaippu news ரயில்வே வேலைவாய்ப்பு 2019

More from the section

மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்:  ஆக. 31-க்குள்  விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு முகாம் இன்று முதல் முன்பதிவு: தமிழக அரசு ஏற்பாடு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை
வேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை மெட்ரோ ரயில் நிறுவன்ததில் வேலை