மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினியர், தள பொறியாளர், திட்ட மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் 

மொத்த காலியிடங்கள்: 06 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: எம்டிஎஸ் - 02 

பணி: எலக்ட்ரிக்கல் என்ஜினியர் - 01 

பணி: தள பொறியாளர் - 02 

பணி: திட்ட மேலாளர் - 01 

தகுதி: எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மின் மற்றும் மின்னணு பொறியியல், சிவில் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Assistant General Manager (HR), BECIL Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P). 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 500 மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

மேலும் முழுமையான விபரங்களை அறியவும் www.becil.com அல்லது http://www.becil.com/uploads/pdf/NewRegistrationFormpdf-4979a73effee49470cd6d73717b20344.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.05.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com