புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

ஏர் இந்தியாவில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கண்ட்ரோலர் வேலை

Published: 22nd April 2019 02:09 PM


ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கண்ட்ரோலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Trainee Controllers
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Pilot, Cabin Crew-இல் ஒரு ஆண்டு பணி அனுபவம் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் 3 டிப்ளமோ தேர்ச்சியுடன் Pilot, Cabin Crew-இல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.21,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Data Entry Operator ஆக 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: Trainee Controllers பணிக்கு 30.04.2019, Data Entry Operator பணிக்கு 02.05.2019 நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CMs Department, Air India Limited, GSD Complex, Opps.New ATC Tower Building, Near IGIA Terminal-2, New Delhi - 110 037

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு  
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பேராசியர் பணி வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி ஜிப்மர்
பேராசிரியர் பணி வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்