திங்கள்கிழமை 22 ஜூலை 2019

ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! 

Published: 20th April 2019 05:30 PM


இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 120 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: GM (Grade E) - 01
பணி: DGM (Grade D) - 06
பணி: AGM (Grade C) - 36
பணி: Manager ( Grade B) - 77

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.31.705 - 58,400
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்றவாறு வயதுவரம்பு மாறுபடுகின்றன. 

தேர்வுக்கட்டணம்: எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.]

தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி தேதி: 15.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பள்ளிக்கல்வித்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? கர்நாடகா வங்கில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி
இலவச உயர்தொழில் நுட்பக் கல்வி! இணையம் வாயிலாக பயன் பெறுங்கள்!
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை