வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் உதவியாளர், தட்டச்சர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

By ஆர்.வெங்கடேசன்| Published: 15th April 2019 01:08 PM

தமிழ்நாடு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வாரியம் தமிழக அரசால் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974-ன் படி (1974-ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் 6-ன்படி) ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்தேழாம் நாள் (27-2-1982) அமைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (த.நா.மா.க.வா) என்று 1983-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

சென்னையை தலைமையகமாக கொண்டு வாரியத்தின் 7 மண்டல அலுவலகங்கள் மற்றும் 38 மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வாரிய தலைவரின் தலைமையில் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மண்டல அலுவலகங்கள் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையிலும், மாவட்ட அலுவலகங்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுச்சூழல் பொறியளார்கள் தலைமையில் ஈரோடு மற்றும் திருப்பூரில் 2 பறக்கும் படைகளும் செயல்பட்டு வருகின்றன.

தொழிற்சாலைகளைக் கண்காணிக்க உதவும் வகையில் வாரியத்தில் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும், 8 மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும் செயல்படுகின்றன.

இவ்வாரியம் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981, சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் இச்சட்டங்களின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட கீழ்கண்ட விதிகளைச் செயல்படுத்துகின்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாசு கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் விதிகளை முறையாக செயல்படுத்தி வருகிறது. வெளியேற்றப்படும் நீர், காற்று மற்றும் நில மாசுக்களின் தன்மையை வாரியம் சேகரித்து, கண்டறிந்து தரவுகளை வெளியிடுகிறது. மேலும் வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் காற்று மாசின் தரத்தை அறிய முறையான தர அளவுகளை நிர்ணயத்துள்ளது.

வாரியம் தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டமாக இசைவாணைகளை வழங்குகிறது. முதற்கட்டமாக, தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவாணை, தகுந்த இடத் தேர்வுக்கு பின், கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கு முன் வழங்கப்படுகிறது. பிறகு வாரியத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு சாதனங்களை தொழிற்சாலை அமைத்த பின், உற்பத்தியை தொடங்கும் முன் தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை இரண்டாவது கட்டமாக வழங்கப்படுகிறது.

வாரியத்தின் கள அலுவலர்கள் தங்களின் பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு தொழிற்சாலையையும் குறித்த கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, செயல்முறைக் கழிவுநீர் மற்றும் வாயுக் கழிவுகளைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாடு சாதனங்களின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். வாரியம் ஒவ்வொரு தொழிற்சாலை வெளியிடும் மாசுபாட்டினை கண்காணிக்க அவற்றின் தன்மையை கீழ் கண்டுவாறு வகைப்படுத்தியுள்ளது.

தொழிற்சாலைகளை ஆய்வு செய்தல் மற்றும் மாதிரி சேகரித்தலுக்கான காலவரையறை

தொழிற்சாலைகளின் வகை பிரிவு  ஆய்வு செய்தல் மாதிரிகளை சேகரித்தல்
பெரிய வகை சிவப்பு
ஆரஞ்சு 
பச்சை

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 


இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை    

மாதம் ஒரு முறை 
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 
நடுத்தர வகை சிவப்பு
ஆரஞ்சு 
பச்சை

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை  

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 

சிறிய வகை சிவப்பு
ஆரஞ்சு 
பச்சை

வருடத்திற்கு ஒரு முறை 

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை

3-6 மாதங்களுக்கு ஒரு முறை 

6 மாதங்களுக்கு ஒரு முறை 

17 வகையான தொழிற்சாலைகள்   மாதம் ஒரு முறை மாதம் ஒரு முறை

           
மாசினை கட்டுப்படுத்த தவறும் தொழிற்சாலைகளின் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நிர்ணயத்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தொழிற்சாலைகளுக்கு முகாந்திர விளக்கம் கோரும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. மேலும் அத்தகைய தொழிற்சாலைகள் மூடுதல், மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீர் வழங்குதலை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.

வாரியம், தொழிற்சாலைகளை சிறந்த முறையில் கண்காணிக்க பொறியார்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது. வாரியத்தில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்களும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களும் ஆரஞ்சு, பச்சை வகை மற்றும் சிறிய சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்கவும், புதுபிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் முகாந்திர விளக்கம் கோரவும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

வாரியம், தொகுப்பாக அமைந்துள்ள சிறிய வகை தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளுக்கு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிர்மானிக்க சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாரியம் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை கண்டறிந்து உரிய முறையில் அதனை வெளியேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற உகந்த இடங்களை தேர்வு செய்துள்ளது.

இந்த வாரியத்தில் தற்போது காலியாக உள்ள 91 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 91
பணி: Assistant (Junior Assistant)
காலியிடங்கள்: 36

பணி: Typist 
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினி பிரிவில் 6 மாத கால சான்றிதழ் படிப்பு, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tnpcb.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா..? 
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை
கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? 
நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் தேர்வு
குரூப் 4 தேர்வு: தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு