வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

Published: 30th November 2018 12:25 PMதமிழக அரசின் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவைகள் துறையில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 24க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 41

பதவி: Principal, Industrial Training Institute / Assistant Director of Training - 09 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

பதவி: Assistant Engineer (Industries) - 32
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150; இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: முதல் தாள் - 02.03.2019 அன்று காலை 10 முதல் 1 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் ரூ.2.30 முதல் 4.30 மணி வரை நடைபெறும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_35_Principal_ITI_AEI.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2018

Tags : டிஎன்பிஎஸ்சி TNPSC Recruitment Principal Posts Assistant Engineer (Industries) தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

More from the section

குரூப் 2 முதன்மைத் தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றம்: டிஎன்பிஎஸ்சி
டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள்: தடையை நீக்கியது  உயர்நீதிமன்றம்
என்ஐடியில் உதவி பேராசிரியர் வேலை வேண்டுமா?
எய்ம்ஸ் மருத்துவமனையில் பார்மசிஸ்ட், அலுவலக உதவியாளர் வேலை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..!