சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை வேண்டுமா? 

Published: 30th November 2018 02:43 PMசென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆட்சி எல்லையில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையரால் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 21 

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சிறப்பு தகுதி: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 + 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் 

வயதுவரம்பு: 01.07.2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு வயதுவரம்பில் உச்ச வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள்: இப்பணிக்கான விண்ணப்பங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) அலுவலகங்களிலும், சென்னை மற்றும் வேலூர், தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும் மற்றும் சென்னை, தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலும் சமர்ப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம், 6வது தளம், டி.எம்.எஸ். வளாகம், சென்னை - 600 006. தொலைபேசி 044 2433 9934

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.labour.tn.gov.in/Labour/recruitment/Chennai_OA_Advertisement.pdf  அல்லது http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/11/Chennai_OA_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2018 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலும் சமர்ப்பிக்கலாம். 

Tags : Office Assistant Recruitment Labour Department கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலக உதவியாளர் வேலை

More from the section

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலை வேண்டுமா? 
இளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!
ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் சிஸ்டம் அதிகாரி வேலை: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!