தெரிந்துகொள்ள

தேர்தல் நடத்தை விதி: ஆளும் கட்சி என்னவெல்லாம் செய்யக் கூடாது?

31st Mar 2021 10:00 AM

ADVERTISEMENT


ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் நாளிலிருந்து, அந்த மாநிலத்துக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த தேர்தல் நடத்தை விதிகள், கட்சிகள், பொதுமக்கள், கூட்டங்கள், ஆளும்கட்சி என பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதாவது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாநிலத்தில், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கான தேர்தல் நடத்தை விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

ஆட்சியில் இருக்கும் கட்சி அரசு அதிகாரித்தைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதான புகாருக்கு இடமின்றி நடந்துகொள்ள வேண்டும்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசு விமானங்களையோ வாகனங்களையோ இதர அரசு இயந்திரங்களையோ அரசு ஊழியர்களையோ பயன்படுத்தக் கூடாது.

ADVERTISEMENT

ஓய்வு இல்லங்கள், விடுதிகள், இதர அரசு தங்குமிடங்களை ஆளும் கட்சியினரும், அக்கட்சியின் வேட்பாளர்களும் மட்டுமே பயன்படுத்தாமல், நியாயமான முறையில் அனைவருக்கும் அனுமதிக்க வேண்டும். இந்த இடங்களை எந்தக் கட்சியும் தங்கள் கட்சி பிரசார அலுவலகமாகப் பயன்படுத்தக் கூடாது.

ஆளும் கட்சிக்கு சாதகமான முறையில் அரசு செலவில், செய்தியேடுகளிலும், மற்ற ஊடகங்களிலும், விளம்பரங்களை வெளியிடுவதையும் சாதனைகளை ஒருதலைபட்சமாக வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு அமைச்சர்களோ அல்லது மற்ற ஆணையங்களோ விருப்புரிமை நிதியிலிருந்து மானியங்கள் அல்லது பணப்பட்டுவாடாக்களை அறிவிக்கக் கூடாது.

ஆளும்கட்சி கீழ்க்கண்டவற்றை தவிர்க்க வேண்டும்..

நிதி மானியம் அல்லது அது பற்றிய உறுதிமொழி அறிவிப்பு.

எந்த விதமான திட்டங்களுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுதல்.

சாலை அமைத்தல், குடிநீர் வசதி போன்றவை குறித்து உறுதிமொழி.

அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களில் தற்காலிக நியமனம் போன்றவை குறித்த அறிவிப்புகளை வெளியிடுதல்.

Tags : election tn assembly voting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT