தெரிந்துகொள்ள

மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? விடியோ

27th Mar 2021 10:00 AM

ADVERTISEMENT


முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள்,  மின்னணு வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள வசதியாக, தேர்தல் ஆணையம் விளக்க விடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் சுமூகமாக நடைபெற ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் வெற்றியை தங்கள் வசப்படுத்த அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் பயன்பெறும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதையும், தாங்கள் செலுத்திய வாக்கு சரியாகப் பதிவானதா என்பதை விவிபேட் கருவி மூலமாக உறுதி செய்து கொள்ள வேண்டியது குறித்தும் தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

அந்த விடியோவைக் காண.. 
 

Tags : voting election tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT