தெரிந்துகொள்ள

இணையதளத்தில் வாக்குச்சாவடியை அறியும் வசதி

5th Apr 2021 02:45 PM

ADVERTISEMENT


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், எவ்வித அச்சமும் இன்றி மக்கள் வாக்களிக்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதையும் படிக்கலாமே.. வாக்காளர் சீட்டு கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்

அதில், புதிய தலைமுறை வாக்காளர்களும், வீடு மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களும், தங்களது வாக்குச்சாவடி எங்கு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதலில்.. உங்கள் தொகுதியைத் தேர்வு செய்து அதிலிருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளின் பட்டியலையும் பார்க்கும் வசதி உள்ளது. அதாவது https://www.elections.tn.gov.in/PSLIST_20012021.aspx என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வாக்குச்சாவடிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வழிமுறை..

இது சற்று எளிதான வழிமுறை என்றாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாகப் பதிவு செய்ய வேண்டியது மட்டும் அவசியம்.

அதன்படி https://electoralsearch.in/  என்ற இணையதளத்தில் சென்று உங்களது விவரங்களை அளித்து வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளலாம். இதில், பெயர், வயது, மாவட்டம், பேரவைத் தொகுதி ஆகியவற்றை வாக்காளர் பதிவு செய்தால் போதும், அவர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் முழு முகவரியும் தெரிய வரும். இதற்கு வாக்காளர் அடையாள எண் தேவையில்லை என்பது மிகவும் சிறப்பு.

உதாரணமாக, 

இந்த இணையப் பக்கத்தில் உங்கள் தகவல்களை பதிவு செய்தால்.. கீழே காட்டப்பட்டிருப்பது போல உங்களது வாக்குச்சாவடியின் முழு முகவரியும் தெரிய வரும்.

என்னிடம் வாக்காளர் எண் இருக்கிறது. அதை வைத்து வாக்குச்சாவடியை தேட முடியுமா என்றால், அதற்கும் வசதி செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

எனவே, இவ்விரு வசதிகளைக் கொண்டு உங்கள் வாக்குச்சாவடியை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே.. நாளை வாக்களிக்கச் செல்வோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தமிழகத்தில் நாளை ஒட்டுமொத்தமாக 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் பொருத்தப்பட்டுள்ளது. 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கரோனா நோயாளிகள் வாக்களிக்க தற்பாதுகாப்புக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்குப் பிறகு, தற்பாதுகாப்புக் கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : election commission assembly election EC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT