தெரிந்துகொள்ள

வாக்காளர் சீட்டு கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்

5th Apr 2021 03:26 PM

ADVERTISEMENT

 

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஆனால் இதுவரை வாக்காளர் சீட்டு கிடைக்கவில்லை என்று கவலைப்படுவோர் கவனத்துக்கு..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  வாக்காளர் சீட்டை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யவும், பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, உங்களது பெயர் மற்றும் நீங்கள் வாக்களிக்கவிருக்கும் தொகுதியின் பெயரைப் பதிவு செய்து உங்கள் வாக்காளர் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. இணையதளத்தில் வாக்குச்சாவடியை அறியும் வசதி

வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், எவ்வித அச்சமும் இன்றி மக்கள் வாக்களிக்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

புதிதாக வீடு மாறியவர்கள், வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்காளர் சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆனால் கவலை வேண்டாம், வாக்காளர் சீட்டு கிடைக்காமல் இருந்தால், அதனை இணையதளத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். அதன்படி https://electoralsearch.in/  என்ற இணையதளத்தில் சென்று உங்களது விவரங்களை அளித்து வாக்காளர் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் பெயர், வயது, மாவட்டம், பேரவைத் தொகுதி ஆகியவற்றை வாக்காளர் பதிவு செய்தால் போதும், அவர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் முழு முகவரியும் தெரிய வரும். இதற்கு வாக்காளர் அடையாள எண் தேவையில்லை என்பது மிகவும் சிறப்பு.

ஒருவேளை வாக்காளர் எண் வைத்திருப்பவர்கள் அதனை பதிவு செய்தும் வாக்காளர் சீட்டினைப் பெறலாம். அதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கீழே வரும் தகவலில் வியூ டீடெயில்ஸ் என்பதை கிளிக் செய்து, உங்களது வாக்காளர் சீட்டைப் பெறலாம். அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்தலாம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் பெயர் உள்ளிட்டவற்றை சரியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதே.

தமிழகத்தில் நாளை ஒட்டுமொத்தமாக 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் பொருத்தப்பட்டுள்ளது. 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கரோனா நோயாளிகள் வாக்களிக்க தற்பாதுகாப்புக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்குப் பிறகு, தற்பாதுகாப்புக் கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Voter ID election voting voter slip
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT