தொகுதிகள்

ராதாபுரம்: தொகுதியில் வெற்றி யாருக்கு?

டேவிட் பிரபாகர்

திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்கு எல்கையாக அமைந்துள்ளது ராதாபுரம் தொகுதி. மண்வளம், மலைவளம், கடல்வளம் நிறைந்த தொகுதி.  கூடங்குளம் அணுஉலை, இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள மகேந்திரகிரி  திரவ உந்து  மையம் இங்குள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி,  மீன்பிடித் தொழில், ஓடு, செங்கல் தயாரிப்பு, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது.

நாடார் சமூதாயத்தினர் அதிகமாக உள்ள இந்தத்தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், மீனவர், யாதவர், தேவர் உள்ளிட்ட இதர சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர். இத்தொகுதியில் 1957 முதல் 2016 வரையிலும் 14 தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 2 முறையும், திமுக 2 முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ராதாபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 69 ஆயிரத்து 874 உள்ளனர். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 615-ம் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 247-ம் உள்ளனர். 3-ம் பாலியல் இனத்தினர் 12 பேரும் உள்ளனர்.

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:

ஐ.எஸ்.இன்பதுரை (அதிமுக)-69, 590
அப்பாவு (திமுக)- 69,541
கனி அமுதா (பாஜக)-11,131
சிவனனைந்த பெருமாள் (தேமுதிக)-8,362.

அரசியல் நிலவரம்: அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ப.செளந்திரராஜன், முன்னாள் அமைப்புச் செயலர் நாராயணபெருமாள், தற்போதைய அமைப்புச் செயலர் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட இளைஞரணிச் செயலர் து.பால்துரை ஆகியோர் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர்.

திமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுவதில் மாவட்ட அவைத் தலைவர் மு.அப்பாவு, மாநில வர்த்தக அணி இணைச் செயலர் கிரகாம்பெல் ஆகியோரிடையே தீவிர போட்டி நிலவி வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரைக்கு கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நிறைவேறியதும், நிறைவேறாததும்:

இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள், குடிநீர் வசதி, பாலங்கள், தடுப்பு அணைகள், வள்ளியூர் கல்வி மாவட்டம், திசையன்விளை தனி வட்டம், ராதாபுரம், வள்ளியூர் அரசு மருத்துவமனைகளில் நவீன வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.

காவல்கிணறு பூ மார்க்கெட் பாழடைந்த நிலையில் உள்ளது. விவசாய விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க சந்தை ஏற்படுத்தப்படவில்லை. வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம், வள்ளியூரை தமைமையிடமாகக் கொண்ட கோட்டாட்சியர் அலுவலகம் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 10 மீனவ கிராமங்கள் இருக்கிற இத்தொகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படாதது பெரும் குறையாக காணப்படுகிறது. காற்றாலை அதிக எண்ணிக்கையில் இருக்கிற இந்த தொகுதியில் காற்றாலை உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படவேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT