தொகுதிகள்

ஊத்தங்கரை (தனி): அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு

22nd Feb 2021 06:02 PM | கே. பழனி

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று ஊத்தங்கரை (தனி) தொகுதி. இந்தத் தொகுதி மக்களின் பிரதான தொழில்  விவசாயம். நெல்,  வாழை, மா,  தென்னை, புளி, அவரை, துவரை  உள்ளிட்டவை இங்கு  சாகுபடி செய்யப்படுகின்றன. 

மாங்கனி நகரம் என்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெயர் வருவதற்கு காரணமே ஊத்தங்கரை தொகுதியில் அதிகமாக விளைவிக்கும் மா  விளைச்சல்தான். விளைச்சல் காலங்களில் கிடைக்கும் மாங்காய்களை  இங்குள்ள விவசாயிகள் பெங்களூர், கடலூர், திருவண்ணாமலை போன்ற  பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஊத்தங்கரை, மத்தூர்,  போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டர்  விளைநிலங்களில், மா சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.  குறைந்தபட்சம் மா விளைச்சல் மாதங்களான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்  சுமார் 6 லட்சம் டன் மாங்காய்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்கள் விவரம்: 

ADVERTISEMENT

ஆண்கள்: 1,19,030
பெண்கள்: 1,17,984
மூன்றாம் பாலினத்தவர்: 56
மொத்த வாக்காளர்கள்: 2,37,070.

நில அமைப்பு:

ஊத்தங்கரை தனி சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு திசையில் திருவண்ணாமலை மாவட்டத்தையும், மேற்கு திசையில் கிருஷ்ணகிரி தொகுதியையும், வடக்குத் திசையில் திருப்பத்தூர் மாவட்டத்தையும், தெற்கு திசையில் தருமபுரி மாவட்டத்தையும்  கொண்டுள்ளது.

சமூக நிலவரம்:

ஊத்தங்கரை தொகுதியில்  வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 28 சதவீதம், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 18 சதவீதம், வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 12 சதவீதம், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 8 சதவீதம், நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 7, சதவீதம், இஸ்லாமியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 5 சதவீதம்,  அகமுடையார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 5 சதவீதம், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 4 சதவீதம், செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 3 சதவீதம், இதர சமூகத்தைச் சார்ந்தவர்கள் 10  சதவீதம் உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் விவசாய தொழிலாளர்கள் ஆவர்.

அரசியல் நிலவரம்:

தொகுதி மறுசீரமைப்பின் போது அரூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டதுதான் ஊத்தங்கரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதி முதல் சட்டப் பேரவைத் தேர்தலை 2011 ஆம் ஆண்டுதான் சந்தித்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலிலும், 2016 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலிலும் மனோரஞ்சிதம் நாகராஜ் தொடர்ந்து இரண்டு முறை சட்டபேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

மனோரஞ்சிதம் கடந்த 1998 முதல் 2016 வரை கட்சியில் மாவட்ட அதிமுக இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 1996 முதல் 2001 வரை கிருஷ்ணகிரி ஒன்றியக்குழுத் தலைவராக பதவி வகித்தார்.

2011 ஆம்  ஆண்டு தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் மனோரஞ்சிதம் நாகராஜ், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  முனியம்மாள் கனியமுதன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில்  மனோரஞ்சிதம் நாகராஜ்  90 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றார். முனியம்மாள்  கனியமுதன் 51,223 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். 39,158 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவைச் சேர்ந்த மனோரஞ்சிதம் நாகராஜ் வெற்றி பெற்றார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக கட்சி சார்பில் மனோரஞ்சிதம்  நாகராஜும், திமுக கட்சி சார்பில் மாலதி  நாராயணசாமியும் போட்டியிட்டனர். இதில் மனோரஞ்சிதம் நாகராஜ் 69,980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  திமுக வேட்பாளர் மாலதி நாராயணசாமி அவர்கள் 67,367 ஆயிரத்து வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 2,613 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவைச் சேர்ந்த மனோரஞ்சிதம் நாகராஜ் வெற்றிபெற்றார். 

கட்சிகளின் செல்வாக்கு:

ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக, திமுகவுக்கு தனி செல்வாக்கு உள்ளது. அதிமுகவுக்கு ஊத்தங்கரை, காரப்பட்டு, கதவனி, எக்கூர், ஆண்டியூர், மகனூர்பட்டி, படப்பள்ளி, அனுமன்தீர்த்தம், புதூர், பெரிய கொட்டகுளம், மத்தூர் உள்ளிட்ட பகுதிகள்  ஆதரவுப்  பகுதிகளாக  உள்ளன.  திமுகவுக்கு  ஊத்தங்கரை,  சாமல்பட்டி,  சிங்காரப்பேட்டை,  அத்திப்பாடி,  மிட்டப்பள்ளி, மூன்றம்பட்டி, கல்லாவி, திருவணப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் ஆதரவுப் பகுதிகளாக உள்ளன

பாமகவுக்கு ஊத்தங்கரை, கல்லூர், தள்ளப்பாடி, ஊணாம்பாளையம், பொம்பட்டி, உப்பாரப்பட்டி, கொட்டகுளம், பாப்பாரப்பட்டி, மத்தூர் பகுதிகள் ஆதரவுப் பகுதிகளாக உள்ளன. விசிக கட்சியினர், ஊத்தங்கரை - அம்பேத்கர் நகர், சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி,நொச்சிப்பட்டி, சாமல்பட்டி, கல்லாவி, குண்ணத்தூர், காரப்பட்டு, மத்தூர் பகுதிகளில் உள்ளனர்.

கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் கூட்டணிக்குப் பிறகே தெரியவரும். தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

ஊத்தங்கரை தொகுதிக்கு உள்பட்ட சாமல்பட்டி கிராமத்தில் ரூ. 22 கோடி  ரூபாய் மதிப்பில் ரயில்வே தரைமட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ரயில் பாதை வழியே கடக்காமல் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில்  பயணிக்க இந்த தரைமட்ட ரயில்வே பாலம் உதவுகிறது.

கெரிகேப்பள்ளி கிராமத்தில் ரூ.14 கோடி மதிப்பில் தரைமட்டப் பாலம்  கட்டப்பட்டுள்ளது. மேலும் புதூர் புங்கணை ஊராட்சிக்கு உள்பட்ட  புதூர்  முதல் தாமல்ஏரிபட்டி கிராமத்திற்குச் செல்ல தென்பெண்ணையாற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி- தர்மபுரி மாவட்ட மக்களை இணைக்கும் பாலமாக ரூ.  5 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு விடுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி  செய்து கொடுத்துள்ளனர். மேலும் நபார்டு திட்டத்தின் கீழ் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் ரூ. 40 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை  புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 

நிறைவேற்றப்படாத திட்டங்கள்:

சாமல்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT