கால்நடை மருத்துவ இளநிலை படிப்பு: இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான இடங்களுக்கு இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட


சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான இடங்களுக்கு இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல்,  திருநெல்வேலி,  ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச் / பி.டெக்) 460 இடங்கள் உள்ளன. 

இந்தநிலையில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 10-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்த அவகாசம் ஜூலை 1-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.

இந்நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கியது முதல் தற்போது வரை பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 7,488 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 1,268 மாணவர்களும் விண்ணப்பித்திருப்பதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில்  ( (www.tanuvas.ac.in)  ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 9 -ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 9- ஆம் தேதி பிவிஎஸ்ஸி - ஏஹெச் (சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு), பிடெக் (சிறப்பு பிரிவு) ஆகிய படிப்புகளுக்கும், ஜூலை 10 ஆம் தேதி பிவிஎஸ்ஸி- ஏஹெச் (கலையியல் பிரிவு) படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜூலை 11 ஆம் தேதியும்  கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com