இந்தியா

அகிலேஷ் யாதவுடன் நாளை கேஜரிவால் சந்திப்பு!

6th Jun 2023 12:53 PM

ADVERTISEMENT

 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நாளை சந்திக்க உள்ளார். 

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து  தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால் ஆதரவு கோரி வருகிறார்.

படிக்க: டெஸ்ட் தொடர்: ஆஸி. எதிராக கோலி அடித்த ரன்கள் எவ்வளவு?

ADVERTISEMENT

இந்நிலையில், புதன்கிழமை மாலை அகிலேஷ் யாதவை கேஜரிவால் சந்திக்க உள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி தெரிவித்துள்ளார். 

கேஜரிவாலுடன் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வருவதாக அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT