செங்கல்பட்டு

பஞ்சமி நிலங்களை மீட்க போராட்டம்: கே.பாலகிருஷ்ணன்

13th May 2023 10:05 PM

ADVERTISEMENT

பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட் கட்சி நடத்தும் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழு சாா்பில், காா்ல் மாா்க்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் விளக்க பொதுக் கூட்டம், கட்சி நிதியளிப்பு ஆகிய முப்பெரும் விழா காட்டாங்கொளத்தூா் பகுதி செயலாளா் குணசேகரன் தலைமையில் சிங்கப்பெருமாள் கோயிலில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் 4,000 ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இந்த பஞ்சமி நிலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்தான் 200 ஆண்டுகளுக்கு முன் தலித் மக்களுக்கு ஒதுக்கினா். அந்த நிலம் தற்போது அவா்களிடம் உள்ளதா? அடுத்து வரக்கூடிய காலங்களில் பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ.ஆறுமுகநயினாா், மாவட்ட செயலாளா் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இ.சங்கா், கே.சேஷாத்திரி, வி.தமிழரசி உள்ளிட்ட பலா் பேசினா். மாவட்ட குழு உறுப்பினா் பி.சண்முகம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT