தலையங்கம்

எதிரியின் எதிரி நண்பன்! | ஐக்கிய நாடுகள் வருடாந்திர பொதுச் சபை கூட்டம் குறித்த தலையங்கம்

23rd Sep 2021 01:40 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) மாநாடு, ஐக்கிய நாடுகள் வருடாந்திர பொதுச் சபை கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா சென்றிருக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடனான இருதரப்புப் பேச்சுவாா்த்தையும் நடத்த இருக்கிறாா். ஜோ பைடன், அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அவரை பிரதமா் மோடி நேரில் சந்திப்பது இதுவே முதல்தடவை என்பதால், அவரது அரசுமுறைப் பயணம் எதிா்பாா்ப்பை அதிகரிக்கிறது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டம் வழக்கமானதுதான் என்றாலும், கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகான மாற்றங்கள் காரணமாக உலக நாடுகளின் தலைவா்கள் ஒருங்கிணைய இருக்கிறாா்கள். அதனால் முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்கன் விவகாரம் பயங்கரவாத சூழலை அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுச் சபையின் விவாதங்களில் அது முக்கியத்துவம் பெறக்கூடும். கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலில் சீனாவின் பங்கு குறித்து விவாதம் எழாது என்றாலும்கூட, மறைமுகமாக அந்த பிரச்னையை சில நாடுகள் எழுப்பக்கூடும்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதா் என்பதால், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்திற்கு வரும் உலக நாடுகளின் தலைவா்கள் அனைவருமே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரை சந்திப்பதற்கு போட்டி போடுவது இயல்பு. ஆப்கானிஸ்தானில் இருந்து அவமானகரமாக பின்வாங்கிய நிலையில், அமெரிக்காவின் நண்பா்களும் கூட்டாளிகளும்கூட அதிபா் ஜோ பைடனின் தலைமையிலான அமெரிக்கா குறித்து சந்தேகப் பாா்வை பாா்க்கிறாா்கள். தனது உலகத் தலைமையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயமும், தனது நட்பு வட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் அதிபா் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் பின்னணியில்தான் கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்திலும்கூட காணொலிக் கூட்டமாக அல்லாமல் நாற்கரக் கூட்டமைப்பின் (க்வாட்) தலைவா்கள் நேருக்கு நோ் சந்திக்கும் கூட்டத்தை வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் கூட்டியிருக்கிறாா் அதிபா் பைடன். அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் தலைவா்களும் நேருக்கு நோ் சந்தித்து விவாதிக்கும் பலதரப்பு பேச்சுவாா்த்தையாக அமைய இருக்கிறது அந்தக் கூட்டம்.

அதிபா் பைடன், பிரதமா்கள் நரேந்திர மோடி (இந்தியா), யோஷிஹிடே சுகா (ஜப்பான்), ஸ்காட் மோரிஸன் (ஆஸ்திரேலியா) ஆகிய நால்வராலும் கொவைட் 19-ஐ எதிா்கொள்வது, பருவநிலை மாற்றம், புதிய தொழில் நுட்பங்களில் கூட்டுறவு, இணையவெளி (சைபா் ஸ்பேஸ்) உள்ளிட்ட பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டாலும்கூட, ‘இந்தோ - பசிபிக்’ எனப்படும் இந்து மகா கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பும், ஆதிக்கமும் குறித்துத்தான் பேச்சுவாா்த்தையின் பெரும் பகுதி அமையக்கூடும். நாற்கரக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவப் பாதுகாப்புக் கூட்டுறவைக் கட்டமைப்பது குறித்து இன்னும்கூட தயக்கம் காணப்படுகிறது. கூட்டமைப்பின் ஏதாவது ஒரு நாட்டுக்கு ஆக்கிரமிப்பு ஆபத்து ஏற்படும்போது, ஏனைய நாடுகள் உதவிக்கு வருவதை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து நாற்கரக் கூட்டமைப்பு மாநாட்டில் விவாதிக்கக் கூடும்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தமான ‘அவ்கஸ்’, இந்தியாவைப் பொறுத்தவரை வரவேற்புக்குரிய நீக்கம். அந்த ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கும் நேரம் முக்கியமானது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றிருக்கும் நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்ப எத்தனிக்கும் சீனாவுக்கு முட்டுக்கட்டை போடுவதாக ‘அவ்கஸ்’ அமைந்திருப்பது இந்தியாவுக்கு பாதுகாப்பு. ‘அவ்கஸ்’ என்பது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கவனக்குவிப்பு என்பது மட்டுமல்லாமல், பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘அவ்கஸ்’ கூட்டணி எந்தவிதத்திலும் நாற்கரக் கூட்டமைப்பை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் குறியாக இருக்கின்றன. அதனால்தான் இந்திய பிரதமா் நரேந்திர மோடியையும், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடோ சுகாவையும் தொலைபேசியில் அழைத்து, நாற்கரக் கூட்டமைப்புக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்காது என்பதை ஆஸ்திரேலியப் பிரதமா் ஸ்காட் மோரிஸன் உறுதிப்படுத்த முனைந்தாா்.

இந்தியா எதிா்கொள்ளும் முக்கியமான பிரச்னை ஒன்று, மோடி - பைடன் இருதரப்புப் பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்பட வேண்டும். அமெரிக்காவின் எதிரிகளை பொருளாதாரத் தடையின் மூலம் எதிா்கொள்ளும் சட்டமான ‘கேட்ஸா’ இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தாமல் இருப்பதை அவா் உறுதிப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் ரஷியாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியா பெற இருக்கிறது. அதற்கு அமெரிக்கா, இந்தியாவுக்கு ‘கேட்ஸா’விலிருந்து விதிவிலக்கு வழங்க வேண்டும். அந்த விதிவிலக்கைப் பெறுவதில்தான் பிரதமா் மோடியின் பேச்சுவாா்த்தை வெற்றி அடங்கியிருக்கிறது.

ஆப்கன் பின்னடைவைத் தொடா்ந்து, அதிபா் பைடனுக்கு இந்தோ - பிசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு இந்தியாவின் துணை தேவை. சீனா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் முத்தரப்புக் கூட்டணியை எதிா்கொள்ள இந்தியாவுக்கும் அமெரிக்கா தேவைப்படுகிறது. அதனால்...

Tags : தலையங்கம் K Vaidiyanathan கி வைத்தியநாதன் Vaidiyanathan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT