சிறப்புக் கட்டுரைகள்

காலத்தின் தேவை, பொதுப் போக்குவரத்து ஆய்வகம்!

வளவன். அமுதன்

தற்போது தமிழகத்தில் சுமார் 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன.  தமிழகத்தில் சாலை நெரிசலும் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன  குறிப்பாக மாதம் 15 ஆயிரம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். மாதத்திற்கு 1.5 லட்சம் பேர் காயமடைகின்றனர். சென்னையில் உள்ள சாலை நெரிசலினால் தேவையில்லாமல் பல லட்சக்கணக்கான பணம் கரும்புகையாக வெளியாகி வீணாகிறது. 

பொதுப் போக்குவரத்தில் உள்ள சுமார் 20,000 எண்ணிக்கை கொண்ட அரசுப் பேருந்துகள் தமிழகத்தில் உள்ளன.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிறுவனங்களுக்கு தனியாக சாலைப் போக்குவரத்து நிறுவனம், தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. மீதியுள்ள வாகனங்களில் தனியார் ஆம்னி பேருந்து சேவை , பெருநிறுவனங்களுக்கான வாகன சேவை, டீசல் டேங்கர்கள், தண்ணீர் லாரிகள், மண் லாரிகள், டாக்ஸிகள், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, சுற்றுலா ஊர்திகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டிரான்ஸிட் வாகனங்கள் போன்ற வாகன சேவைகளை தனியார் நிறுவனங்கள்/முதலாளிகள் இயக்கி வருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் வாகன போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பல்வேறு வகையான சேவைக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம், சாலை வரி மற்றும் சுற்றுச்சூழல் கட்டணம் போன்ற வரிகளும் மற்றும் அதன் ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் லைசென்ஸ் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்கு கட்டணமும் அரசின் போக்குவரத்துத் துறை பெறுகிறது. ஆனால் , டீசல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளில்  சிக்கித் தவிக்கும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் அரசு ஒரு வழி பாதை பயணம் கொண்ட அரசின் நிறுவனமாக மாநிலப் போக்குவரத்து ஆணையம் இதுவரை செயல்பட்டு வருகிறது. 

மாநிலப் போக்குவரத்து ஆணையம் வரியாக மொத்தம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வசூல் செய்கிறது. அரசின் வணிகவரித் துறையும் நிதித் துறையும் பணம் வருவாய் மட்டுமே கணக்கீடு செய்கிறார்கள். இந்த போக்குவரத்துத் துறைதான் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்ற சேவைகளுக்கு அடிப்படை . போக்குவரத்துத் துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்று இல்லை குறைந்தபட்சம் நலிவடையாமல் இருக்க அரசு பார்த்துக்கொண்டாலே போதும் என்பது எண்ணம்.

எனவே, மேற்குறிப்பிட்ட பொதுப் போக்குவரத்து வாகன வகை சேவைகளை வழங்கும் ஒழுங்கமைக்கப்படாத நிறுவனங்களை சார்ந்த ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கு உரிய பிரச்னைகள், சவால்கள், தீர்வு செய்யப்படாமல் நெடுங்காலமாக இருந்து வருகிறது. தற்காலத்தில் பொதுப் போக்குவரத்துத் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் வாகன சேவை, கட்டணம் செலுத்தும் முறையில், ஆன்லைனில்  போக்குவரத்து சேவையினை பெரும் முறை என்று எவ்வளவோ வந்துள்ளது. மேலும் , தமிழகம் நகரமயமாக்கலினால் கீழ் குறிப்பிட்ட பிரச்னைகளினால் திண்டாடுகிறது.

● அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
● அதிகரிக்கும் சாலை விபத்து, உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் 
● அதிகமான மக்கள் நகரங்களை நோக்கி படையெடுத்தல்
● தனியார் கார் உபயோகம் அதிகரித்தல் 
● அதிகமான தனிநபர் போக்குவரத்து பைக் மூலம் நடைபெறுகிறது 
● போக்குவரத்து சிக்னல்களில் அதிக நேரம் காத்திருக்கும் நேரம்
● மிகக் குறைவான வாகன நிறுத்துமிடங்கள்
● அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் துகள்கள்
● குறைந்த செயல்திறன் மற்றும் அதிக சுற்றுச்சூழல் மாசுபாடு
● அதிக இரைச்சல் மற்றும் ஒலி நிலை
● அதிகரித்து வரும் மோசமான காற்று
● அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சனைகள்
● தகுதியற்ற சாலைகள்/ தளவாடங்கள்
● பார்க்கிங் இடம் தேடி தேவையற்ற பயணங்கள்
● கவர்ச்சியற்ற பொதுப் போக்குவரத்து சேவைகள்

மேற்கண்ட நகரமயமாக்களில் உள்ள பிரச்னைகள் களையப்பட ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு, மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்(MIT UNIVERSITY,USA) அமெரிக்க அரசுடன் அவர்களுடைய பகுதிகளுக்கு உட்பட்ட பொதுப் போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கலினால் பிரச்னைகளுக்கு இதற்கான தனியான ஆய்வகம் 'நகர்ப்புற இயக்கக ஆய்வகம்' (URBAN MOBILITY LAB) வைத்து தீர்வு கண்டு வருகிறது . நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டம் நகரில் டெப்ட் யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தின் பொது போக்குவரத்து ஆய்வகம் (Public Transport Lab) என்ற  ஆய்வகம் ஆம்ஸ்டெர்டாம் நகருக்கான பொதுப்போக்குவரத்தில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு  தீர்வுகளையும் பொதுப்போக்குவரத்து துறை சார்ந்த பயிற்சியும் அறிவையும் வழங்குகிறது  

மேலும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும் தற்கால நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் சாலை நெரிசலை குறைத்தும், விபத்துகளை குறைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய நோக்கிலும் ஒரு அமைப்பு உருவாக்கினால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குறைய வாய்ப்பிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் போன்றவற்றை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் பயிற்சியையும் வழங்கக் கூடிய ஒரு அறிவார்ந்த பொதுப் போக்குவரத்துத் துறை ஆய்வகம் (SMART PUBLIC TRANSPORT LAB) ஒன்று அமைத்தால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குறையும். 

தமிழக அரசில் இதுபோன்ற ஆய்வகம் அமைப்பதில் நிதித் தட்டுப்பாடு இருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் அறிவார்ந்த பொது போக்குவரத்துத் துறை ஆய்வகம் உருவாக்கினால் கீழ்க்குறிப்பிட்ட பயன்கள் பொதுப்போக்குவரத்தினால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

● தனிப்பட்ட வாகனங்களின் சேவையைவிட பொதுப் போக்குவரத்து செலவுகள் குறைவு.
● பொதுப் போக்குவரத்து நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
● நன்கு வளர்ந்த பொதுப் போக்குவரத்து மக்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
● எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துகிறது.
● பொதுப் போக்குவரத்து மக்களின் நடமாட்டத்தை மேம்படுத்துகிறது.
● பொதுப் போக்குவரத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது.
● பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு கார்பன் - டை- ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கிறது.
● சமூகத்திற்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கிறது
● சமமான போக்குவரத்து அமைப்பை வழங்குகிறது

மேலும், பொதுப் போக்குவரத்துக்கான நவீன ஆய்வகம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனத்துடன் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் பொது போக்குவரத்துக்கான நவீன ஆய்வகம் அமைந்தால் நலிவடைந்துகொண்டு இருக்கிற பொதுப் போக்குவரத்துத் துறை சிறப்பான நிலையை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தமிழக அரசு பொதுப் போக்குவரத்துத் துறை நவீன ஆய்வகம், அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்துமாயின் தமிழகம்  மற்ற மாநிலங்களைவிட முன்மாதிரியாக  இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT