சிறப்புக் கட்டுரைகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா: கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

தினமணி


தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் கருணாநிதியும் திமுகவும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.  

1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்தவர்கள்,  காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானோர் திமுகவினர்.

 *அண்ணா வழியில் கருணாநிதியும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர்.  தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார். 1996 ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானபோது, மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் தமிழைப் பாடமொழியாக்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

*அனைத்துப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று சட்டத்தையும் நிறைவேற்றினார்.

*2010-11 ஆம் ஆண்டு அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ்மொழி வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தாய்மொழியில் கற்க ஆணையிடப்பட்டது.  தமிழகத்தில் இன்றுஅனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கருணாநிதியே காரணம்.

*தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் பிற மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி, தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இதை நிறைவேற்றியவர் கருணாநிதி.

*திருக்குறளை திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு தமிழரின் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு.

*கருணாநிதி கவிதைகள் இயற்றியதுடன், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர் அண்ணா மறைந்தபோது, “பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்-அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” எனத் தொடங்கும் கலைஞர் பாடிய இரங்கற்பா, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

*தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்தார்.

*வழக்குமன்ற மொழியாகத் தமிழ்மொழியே இருக்கவேண்டும் என்பதுதான் அண்ணாவின் கொள்கை.  இதை செயல்படுத்தியவர் கருணாநிதி.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்க உத்தரவிட்டவர் கருணாநிதி.

*அண்ணா வழியில், கருணாநிதியும் தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

*தமிழைச் செம்மொழியாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அறிவிப்பு.  இதற்கு முழு முயற்சி எடுத்தவர் கருணாநிதி.

*தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியவர்.

*1974 ஆம் ஆண்டு அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவினார்.
*சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியை நிறுவி,  வெளிநாடுகளிலும் கல்வி மையங்களை ஏற்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT