சிறப்புக் கட்டுரைகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா: திட்டங்களை தீட்டுகிறாரா?, திட்டங்களுக்காகவே இருக்கிறாரா?

DIN



தமிழ்நாட்டின் 5 முறை முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழ்நாடு அரசின் வாயிலாகவும்,  மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதும் ஆயிரக்கணக்கான சாதனைகளை மக்கள் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நிறைவேற்றினார்.

"கருணாநிதி திட்டங்களைத் தீட்டுகிறாரா அல்லது திட்டங்களுக்காகவே கருணாநிதி இருக்கிறாரா?'  என்று கூறுவதுண்டு.

தொழில் துறை வளர்ச்சியில் முன்னணி, கல்வி, மருத்துவ வசதிகளில் தன்னிறைவு, போக்குவரத்துத் துறை அரசு மயம் என்று முத்தான பல்வேறு திட்டங்கள் சிறப்புடையது. இதுதவிர, சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை என்று சரித்திரம் பேசும் சாதனைகள் ஏராளம். கருவறை முதல் கல்லறை வரை மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர் கருணாநிதி.

இவற்றில் கருணாநிதியின் ஆட்சிக்காலம் வாரியாக,  முத்திரைப் பதித்தத் திட்டங்களைப் பார்க்கலாம்!

1969 - 76
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம், சுற்றுலா வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், ஆதிதிராவிடர் இலவசக் கான்க்ரீட் வீட்டு வசதித் திட்டம்,  சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனி அமைச்சகம், பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, பிற்படுத்தப்பட்டோர் -  ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது,  பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழங்கங்கள் உருவாக்கம், அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம், சேலம் உருக்காலைத் திட்டம், 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம், 1,78,880  ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 விவசாயிகளுக்கு வழங்கியது,  சிப்காட் தொழில் வளாகங்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கோயில்களில் கருணை இல்லங்கள், கை ரிக்ஷாக்களை ஒழித்துச் சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமனத் திட்டம்,   அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம், பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம், மாநிலத் திட்டக் குழு உருவாக்கம், காவல்துறை மேம்பாட்டுக்கு காவல் ஆணையம்.  

1989 - 91 ஆட்சிக் காலம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகைகள், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டம், ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம். ஈ.வெ.ரா.  நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம், ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருமான வரபுக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்,  மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட இதுக்கீடு, ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து, பழங்குடி இனத்தவருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு, மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு.

1996 - 2001
உயர்கல்வி, நெடுஞ்சாலை, தகவல் தொழில்நுட்பம், சமூக சீர்திருத்தம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைகள் உருவாக்கம், சென்னையில் டைடல் பூங்கா, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம், உழவர் சந்தைத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கால்நடைப் பாதுகாப்புத் திட்டம், பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கெனத் தனித்தனி நல வாரியங்கள், தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்,  கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை,  ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்,  கிராமங்கள்தோறும் சிமென்ட் சாலைகள், வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம்,  சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், கிராமப்புற பெண்களுக்குத் தொழிற்கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு, கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம், சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்,  சேமிப்புடன்கூடிய மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,  மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை,  அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,  13 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம், 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்.

2006 -2011 ஆட்சிக் காலம்
இலவச கலர் டி.வி. திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,  விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி,  பயிர்க்கடன் வட்டி ரத்து,  புதிய பயிர்க் கடன்கள்,   நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை  அதிகரிப்பு,  மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள், மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு,  பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில்  காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கியது,  விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை,  கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை,  ஆதிதிராவிட விவசாயிகள் "தாட்கோ' நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுடன் தள்ளுபடி,  நில அடமானத்தின்மீது தொழில்புரிய வழங்கப்பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு, வாங்கிய கடன் அசல் தொகையைச் செலுத்தினால் கடன் ரத்து,  மாநிலத்துக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் காவிரி } குண்டாறு இணைப்புத் திட்டம்,  தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT