சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: அமையுமா தமிழீழம்? நேரடி ரிப்போர்ட்-20

17th May 2022 10:58 AM | கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

ஈழத்தமிழர்களின் தேசிய போராட்டத்தின் இறுதிப் போர் மே-2009 தோல்வியினால் தமிழீழம் இனி ஒருபோதும் உருவாகாது என்றே ஈழத்தமிழர்கள் சிலர் நம்புகிறார்கள். ஆனால், அறிவியலால் ஆயுதத்தால் அழிந்தவரை மீள்கட்டுமானம் செய்யமுடியும்.

ஆயுதத்தால் அழிக்க மட்டுமே தெரியுமென்றால், அறிவால் அழிந்தவற்றை மீடடெடுக்கவும் முடியும் .

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இலங்கையில் சீனாவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசயங்கள் புவி அரசியலில் நல்லதல்ல.

ADVERTISEMENT

இலங்கையில் உள்ள சீனாவினால் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து தரைவழியாக திருக்கோணமலைக்குச் செல்லக்கூடிய கார்ப்பெட் அகண்ட வீதிகளும், சிறு ஏரிகளை கடக்க உறுதியான பாலங்களும் போடப்பட்டு சீன நிறுவனங்கள் தமது பணியை முடித்துள்ளது.

தென்னிலங்கையில் இருந்து விரைவாகவும் வேகமாகவும் திருகோணமலைக்கு வரக்கூடிய வசதியை செய்து முடித்த சீனாவின் நிறுவனங்கள் இப்போது அங்குள்ள தமிழ்மக்களை அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டம் , மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்மக்களை முதலில் எண்ணிக்கையில் குறைத்து வருகின்றனர்.

இதையும் படிக்க | எரியும் இலங்கை: சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்; நேரடி ரிப்போர்ட்-17

இதன் அடிப்படையில் அம்பாறையில் தமிழர் பிரதிநித்துவம் 1990-களில் 1,85,000 ஆக இருந்தபோதும் இப்போது 1,00000 அளவில் குறைக்கப்பட்டு உள்ளார்கள் என்று அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த 85,000 மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டும் மிகவும் குறைந்தளவான மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தும் சென்றுள்ளார்கள்.(இலங்கையின் புள்ளிவிபரங்கள் பலதடவை உண்மையை உரைப்பதில்லை பலிகடா ஆக்கவேண்டும் என்று எண்ணியவர்கள் ஒருபோதும் சாட்சியங்களை சரியாக விடுவதில்லை என்பது வெளிப்படையுண்மை)

அம்பாறையில் இருந்து மலையக பிரதேசங்களும், சிங்கள பிரதேசங்களுக்கும் செல்லக்கூடிய உள்ளக பாதையை அம்பாறை தமிழர்கள் (கொரில்லா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் அறிந்தே இருந்தார்கள்) இதனையும் சீன அரச முகவர்களுக்கு சிங்கள அரசின் கைக்கூலிகள் சொல்லியே கொடுத்து இருப்பார்கள். ஆகவே, இலங்கையின் எதிர்கால வரைபடம் எப்படி மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று இலங்கையின் ராஜதந்திரம் சிறப்பாக திட்டமிட்டு முடித்துள்ளது என்பதும் வெளிப்படையுண்மை. இலங்கையில் இருந்து பொருளியல் நிபுணர்களும், அறிஞர்களும், பூகோள புவிசார் அறிஞர்களும், அரசியத்துறை பேராசியர்களும் சொல்கின்ற விசயங்களை உற்று நோக்குவதில் இருந்து இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

இதையும் படிக்க | எரியும் இலங்கை: தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான பிரச்னை; நேரடி ரிப்போர்ட்-18

1948-களில் திருகோணமலை மாவட்டத்தில் 100 வீதமாக இருந்த தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு இப்போது 40 சதவீதமாக சிங்கள முஸ்லீம்களும், 30 சதவீதமாக தமிழர்களும், 30%  சிங்களவர்களும் உள்ளனர்.(வெளிப்படையான கணக்கு)

இப்போது மட்டகளப்பு மாவட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுக்கொண்டு வருகிற அதேவேளை இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் செறிவாக தமிழர்கள் உள்ள இடங்களை நோக்கி சீன நிறுவனங்கள் நகர்ந்துள்ளது . அங்கு சிங்கள பகுதிகளாக்க வேலைகள் நடக்கின்றன. இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் மின் உற்பத்தி, போக்குவரத்து, கட்டட நிர்மாணம், கடலட்டை பண்ணை என்று பல்வேறு துறைகளில் வடக்கில் காலூன்றி உள்ளதுடன் இலங்கையின் வடக்கு பிரதேசங்களின் கடற்கரையோர பிரதேசங்களை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது .

இத்தகைய ஒரு கடினமான மிகவும் நெருக்கடியான சூழலில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் சிங்கள மக்கள் அந்த அரசிற்கு எதிராக போராடுகிறார்கள் என்று இந்தியாவும், மேற்குலகமும் எண்ணிக்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க | எரியும் இலங்கை: இலங்கையில் உள்ள உறவுமுறைகளின் பெயர்கள்; நேரடி ரிப்போர்ட்-19

இலங்கை அரசாங்கத்தை மாற்றியமைத்தாலும், இலங்கை என்கின்ற அரச இயந்திரம் தனது கொள்கையை மாற்றியமைக்கப் போவதில்லை .

அதாவது இலங்கையில் ஈழத்தமிழர்கள் உள்ளவரை இந்தியாவை வெற்றிகொள்ள முடியாது என்கின்ற கொள்கையை இலங்கை அரசு ஒருபோதும் மாற்றியமைக்க போவதில்லை. சைவம், தமிழ் வளர்ந்த வடக்கு, கிழக்கு பகுதியில் கலாச்சரா அடையாளங்கள் அளிக்கப்பட்டு தமிழர்களின் தொன்மையும் காணாமல் செய்யப்படுகிறது.

மேற்குறித்த இந்த உண்மைகளை இந்திய உயர்மட்டம் சரியாக உணரும்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்பதற்காகவே தமிழீழம் அமையும். இது இந்த உலக ஒழுங்கின் நிர்பந்தம். அந்தத் தமிழீழத்தை ஈழத்தமிழ் மக்களில் பெரும்பான்மை மக்களால் விரும்பப்பட்ட கட்டமைப்பின் நிர்வாக கட்டமைப்பே வழிநடத்திச் செல்லும். இதை இந்தியா உணரவேண்டும்.

                                                                                                                                   -தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT