சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் மாதங்களில் முத்திரைப் பதித்த சித்திரை

சோ.தெஷ்ணாமூா்த்தி

தமிழ் மொழி இனிமையுடையது என்பார்கள். தமிழ் மொழியின் சிறப்பே, அதன் தெய்வீகத் தன்மையில்தான் அமைந்துள்ளது என்றும் சொல்லலாம். தமிழால் வைதாலே போதும், இறைவன் நம்மை வாழ வைப்பான் என்பார் அருணகிரிநாதர்.

தமிழால் வாழ்த்தினால் கிடைக்கும் பயன்களை அளவிட முடியாது. அப்படி அளவிட முடியாதப் பயன்களைத் தருவது தமிழ் வேதங்களாகத் திகழும் பன்னிரு திருமுறைகள். சித்திரை மாதத்தை சைத்ரா என்றும், சைத்ர விஷூ என்றும் சொல்லுவார்கள். தமிழகத்தில் சித்திரை மாதப் பிறப்பை சித்திரைக் கனி என்றும் அழைப்பார்கள்.

சித்திரை மாதம் பிறக்கும்போது சகுணம் பார்க்க வேண்டும். முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் வாங்கி வைத்துவிட வேண்டும். விடியற்காலையில் எழுந்தவுடன் யாரையும் பார்க்காமல் நேராகச் சென்று விளக்கேற்றி வைத்து இந்த ஆண்டு முழுக்க நல்ல பலன்களைத் தர வேண்டும் என சகுணம் பார்த்து, தரிசனம் செய்ய வேண்டும். அதற்கு சித்திரைக் கனி என்று பெயர். அதன்பிறகு, புத்தாடைகளை அணிந்து கொண்டு பெரியவர்களை வணங்கி அவர்களது வாழ்த்துக்களைப் பெற வேண்டும். சித்திரை முதல் நாளில் ( ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் ) மகிழ்ச்சியாக இருந்தால், அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியே நிலவும் என்று மக்கள் நம்புகிறார்கள். அவரவர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை கோயில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒருவரையொருவர் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறார்கள். அன்பளிப்புகளை அள்ளியும், கிள்ளியும் கொடுத்துக்கொள்கிறார்கள். அன்று முழுவதும் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியாக அன்றையப் பொழுதைக் கழிக்கின்றனர். சித்திரை முதல் நாளில் கணபதியையும், நவக்கிரகங்களையும் வழிபடலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணமும் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கலாம்.

5 அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம் எனப்படும். திதி, வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் ஆகியவைகளைக் கொண்டது பஞ்சாங்கம். ஜோதிடர்களுக்குப் பஞ்சாங்கம் ஓர் அடிப்படை ஆதார நூலாகும். வீடுகளில் புரோகிதர்கள் பஞ்சாங்கத்தை காலையிலும், மாலையிலும் படித்துத் தகுந்த பலன்களைச் சொல்லுவார்கள். கோயில்களில் தலைமைக் குருக்கள் பஞ்சாங்கம் படிப்பார். புதிய ஆண்டில் எந்தெந்த கிரகங்கள் என்னென்ன செய்யப் போகிறது. எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு அமைந்துள்ளது என்பதைப் படிப்பார்கள். பஞ்சாங்கம் படிப்பதைக் கேட்டாலே புண்ணியம் கிடைக்கும். பாவங்கள் தீரும். அதனால்தான் ரிஷிகளும், நம்முடைய முன்னோர்களும் கண்டுப்பிடித்து வைத்துள்ளனர். அவைகளை, கிரகங்களின் அந்த நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுவார்கள். மாரியம்மன் கோயில்களின் தல மரம் வேப்பமரம். இது தெய்வீக மூலிகை மரம். சித்திரை மாதத்தில் பூத்துக் குலுங்கும்.

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு நாள் அன்று, வீடுகளில் வேப்பம்பூ பச்சடியைச் செய்கின்றனர். வேப்பிலை  ரசம் செய்து சாப்பிட வேண்டும். வேப்பம் பூ தனிப்பட்ட சுவையுடன் கூடியது. அது கசக்கும். கூடவே இனிக்கும். கசப்பும், இனிப்பும் கலந்த அற்புதச் சுவையுடையது. அது, வாழ்க்கையில் கசக்கும் துன்ப நிகழ்சிகள் நடக்கலாம். தொடர்ந்து இனிக்கும் இன்ப நிகழ்ச்சிகளும் ஏற்படலாம்.கசப்பையும், இனிப்பையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் திடமான மனப்பக்குவம் மனிதனுக்கு வேண்டும் என்பதையே வேப்பம் பூ பச்சடியும், வேப்பிலை ரசமும் நுட்பமாக நமக்குத் தெரிவிக்கின்றது.

வருஷம் என்றால் மழை என்று பெயர். பஞ்சாங்கப்படி இருக்க வேண்டும். சித்திரையும் - வைகாசியும் வசந்த ருது. அனைத்து தெய்வங்களுக்கும் வசந்தோஷம் நடத்துவார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. தை மாதமும், சித்திரை மாதமும் சூரியனுக்கு உகந்த மாதங்களாகும். ஆரோக்கியமும், உத்தியோகமும் தரக்கூடியது சூரியன். உத்தியோகக்காரன் என்ற பெயர் கொண்ட சூரியன். ஒருநாள்கூட விடுப்பு எடுப்பதில்லை. 

கேரளத்தில் "விஷுக்கனி காணல்" என்பது சிறப்பான அம்சமாகும். பொன், ரத்தினக் கற்கள், காசுகள், கண்ணாடி, தங்க நகை வகைகள், புத்தாடைகள், கொன்றை முதலான மலர் வகைகள், கனி வகைகள் ஆகியவற்றை அலங்காரமாக அடுக்கி வைக்கின்றனர். தமிழர்களின் தீபாவளிப் பண்டிகைப் போல், கேரளத்தில் விஷுப் பண்டிகை. ஒவ்வொருவருடைய வீட்டின் முன்பும் காலையில் வாத்தியம் வாசிப்பார்கள். உப்பும், சுண்ணாம்பும் விற்பார்கள். அதை வருஷப் பிறப்பன்று முதலில் கட்டாயம் வாங்க வேண்டும். இங்கு தமிழகத்திலும் ஆரம்ப காலத்தில் உப்பும், சுண்ணாம்பும் விற்றார்கள். இப்போது கால மாற்றத்தில் அதை மறந்து விட்டார்கள். விட்டு விட்டார்கள்.

உப்பு என்பது ஆண்மையைக் குறிக்கும். சுண்ணாம்பு என்பது எந்த வித தீமைகளையும் ஏற்படுத்தாது. உடம்பிலும் எந்தவித விஷமும் தீண்டாது என்பதற்காகத்தான். வருஷப் பிறப்பன்று முதலில் உப்பும், சுண்ணாம்பும் வாங்கும் பழக்கம் கேரளத்தில் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. வருஷப் பிறப்பன்று முதலில் கஞ்சிதான் குடிக்க வேண்டும். கஞ்சி குடிப்பதன் காரணம், வருஷப் பிறப்பன்று கஞ்சி குடித்தால், அந்த ஆண்டு முழுக்க சாப்பாட்டுக்கு கஷ்டமே இருக்காது. கஞ்சியாவது கிடைத்து விடும் என்பதை சூட்சமமாக நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எந்த ஆகாரமும் வயிற்றின் உள்ளே போனால், அவைகள் மூன்றாகப் பிரிய வேண்டும். அறிவை வளர்க்க வேண்டும். ஞாப சக்தியைப் பெருக்க வேண்டும். உணவுகள் அறிவாக, மலமாக, ரத்தமாகப் பிரிய வேண்டும். சித்திரையில் செய்யும் சமையலுக்கு தனி மகத்துவம் இருக்கிறது.

தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் ஆண்டின் முதல் பெளர்ணமியை சித்ரா பெளர்ணமி என்று அழைக்கப்படும். வசந்த காலத்தின் பெளர்ணமி. வசந்தமாக இருப்பது இயல்புதானே. சித்திரை  மாதத்தில் பகலில் பகலவன் தருகின்ற சூடும், இதற்கு நேர் எதிராக இரவில் பெளர்ணமி நிலா தருகின்ற இதமான குளிர்ச்சியும், பேரழகும் வேறு பெளர்ணமிக்கு இல்லவே இல்லை. கடற்கரை, ஆற்றங்கரை முதலான நீர் நிலைகளின் கரைகளில் மக்கள் சித்ரா பெளர்ணமியன்று திரளாகக் கூடுகிறார்கள். சிறு சிறு பள்ளங்களைத் தோண்டித் திருவுறலை உருவாக்குகின்றனர். அவற்றின் முன் அர்ச்சனைகளைச் செய்கின்றனர். பல பொருட்களைப் படைத்து வழிபட்டு, சாப்பிட்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

அதாவது, பள்ளத்தில் ஊறல் நீரைப் பெருகச் செய்து, நீர் செழிப்பை அருள வேண்டி இறைவனை வழிபடுகின்றனர். சித்திரை திருதியை நாளில் பரசுராமர் அவதாரம், சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமியில் ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்தார். சித்திரை மாதத்தில் பரணி நாள் அன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். வாசகர்கள் அனைவரும் நித்திரை இல்லாமல், சித்திரையில் முத்திரை பதிக்க வாழ்த்துகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT