சிறப்புக் கட்டுரைகள்

மருமகள் மெச்சிய மாமியார்!

சோ.தெஷ்ணாமூர்த்தி

தான் கோபப்பட்டுப் பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று தனது மாமியாரை மெச்சுகிறார் மருமகள் கார்த்திகா . 

மாமியார் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடியைச் சேர்ந்த, கார்த்திகா தனது மாமியார் சாவித்திரி குறித்துக் கூறியதாவது: 

நாங்கள் ஒருவரையொருவர் விரும்பி, மிகுந்த எதிர்ப்புடன் ஆதரவற்ற நிலையில்தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், முதலில் எனக்கு முழுமையான தைரியத்தையும், ஆதரவையும் வழங்கியவர் எனது மாமியார்தான்.

என் கணவருக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். என்னை தன் மகள் போலத்தான், என் மாமியார் பார்த்துக் கொள்வார். வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இங்கேயும் இருந்து வருகிறேன். நான் என்ன சொன்னாலும் என் மாமியார் கேட்பார். எனது அம்மாவிடம் எப்படி பேசுவேனோ, அப்படித்தான் என் மாமியாரிபமும் பேசுவேன்.

நான் கோபமா இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, என் அம்மாவிடம் பேசுவது போலத்தான் பேசுவேன். பழகுவேன். நான் கோபப்பட்டால் கூட, என் மாமியார் கோபித்துக்கொள்ள மாட்டார். என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிடுவேன். எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பேசிக் கொள்வோம். நான் கருவுற்று இருந்த நேரத்தில், எனது துணிகளை துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் எனது மாமியார்தான் செய்வார்கள். எனக்கு உடம்பு சரியில்லை என்றால் அழுதுவிடுவார். என்னுடைய அம்மா என்னிடம் எப்படி இருப்பாரோ அப்படியே என் மாமியாரும் இருக்கிறார். அந்தவகையில் நான் மிகவும் பாக்கியசாலி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT