சிறப்புக் கட்டுரைகள்

மாமியார்கள் வெளிப்படையாக சொல்ல விரும்பாத 10 விஷயங்கள்!

எஸ். மணிவண்ணன்

மாமியார்கள் மருமகளிடம் வெளிப்படையாக சொல்ல விரும்பாத 10 விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

1. உறவுமுறை சிக்கல்

மாமியார் என்ற உறவு முறையை கையாள்வதில் வெளிநாட்டினரும் திணறியே வருகின்றனர். அவர்கள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் ஒன்றாக உணவு அருந்தி நேரம் செலவிடுவது வழக்கம். மருமகள் அல்லது மாமியார் இடையே இது நடக்கும்போது தேவையில்லாத அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது.

எல்லா மாமியார்களும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதில்லை. ஆனால் மருமகள்களை எப்படி கையாள வேண்டும் என்று சமூகமோ அல்லது முந்தைய தலைமுறையோ அவர்களுக்குச் சொல்லித்தர தவறியதே பிரச்னைக்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது.

திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடிகளுக்கு திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது. சமூகம் சார்ந்து, சமயம் சார்ந்து நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து அவர்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், மாமியார்களுக்கு மருமகள் அல்லது மருமகனை கையாள்வது குறித்து சொல்லித்தரப்படுவதில்லை.

மற்ற உறவுகள் போல மாமியார் என்ற உறவும் எதிர்பார்ப்புகளை சுமக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாதபோது மருமகன்/மருமகள் குறித்து வருத்தம் ஏற்படுகிறது.

வளர்த்த தங்களது குழந்தைகள் புதிய உறவுக்குள் போகும்போது பெற்றோர்கள் இயல்பாகவே வருத்தம் அடைகிறார்கள். திருமணத்திற்கு முன்பு வரை முக்கியமான நபராக இருந்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு உறவு தங்கள் பிள்ளைகளுக்கு முக்கியமாகி விடுகிறது என்ற பெற்றோர்களின் எண்ணமும் பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுகிறது.

2. குடும்ப சொத்தை இழக்க நேரிடும்

வெளிநாடுகளிலும் திருமணம் என்பது பொருளாதாரத்தை அதிகப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மகள் அல்லது மகனின் திருமணத்திற்கு பிறகு சொத்துகள் பிரிவதற்கு வாய்ப்பிருப்பதால், ரத்த உறவுகளுக்கு சொத்துகள் எழுதித் தரப்படுகின்றன.  திருமணத்திற்கு முன்பு மருமகள் அல்லது மருமகனுக்கு சொத்துகள் பரிசாக வழங்கப்படுகின்றன. ஒரு சில குடும்பங்களில் புதிய உறவான மகன்/மகளின் வாழ்க்கைத் துணைக்கு சரிபாதி சொத்துகள் எழுதித்தரப்படாது. விவாகரத்து ஏற்பட்டால் சொத்துகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். 

சொத்துகள் சார்ந்து குடும்பத்தில் பேசும்போது அல்லது முடிவெடுக்கும்போது மருமகளுடன் எந்தவித ஆலோசனையும் இருக்காது. இதனால் அவர்களுக்கு சேரவேண்டிய தொகை சரிபாதியாக சேராததும் மனக்கஷ்டத்துக்குக் காரணம்.

குறிப்பாக, குழந்தைகள் பிறந்தால் பாட்டி தாத்தாவின் மூலம் குழந்தைகள் பெயரில் சொத்துகள் எழுதி வைக்கப்படுகிறது. வளர்ந்த பிறகு அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கு பிறகு மருமகள்/மருமகனுக்கு அதை அனுபவிப்பதற்கான உரிமை இருக்காது என்பதும் பிரச்னைகள் உருவாகக் காரணமாவதாக கூறுகின்றனர்.

3. உறவுமுறையை உருவாக்க அல்லது அழிக்க முடியும்

பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு தனது மாமியாருடன் நெருக்கமாக இருப்பது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது இன்னும் கூடுதல் சிக்கலையே உருவாக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

ஒரு ஆண் தனது மாமியாருடன் இணக்கமாக இருப்பதால் விவாகரத்துக்கான வாய்ப்பு 20 சதவிகிதம் குறைகிறது. ஆனால் இதுவே ஒரு பெண் தனது மாமியாருடன் நெருக்கமாக இருப்பது விவாகரத்துக்கு 20% கூடுதல் வாய்ப்பாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான காரணம் என்ன? அழுத்தம் கொண்ட உறவுமுறையை பேணிக்காப்பதற்காக பெண்கள் தங்கள் கணவருடன் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் செலவிடுவதால் இந்த பிரச்னை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆண்கள் மருமகனாக நெருக்கமாக இருப்பதைக் காட்டிலும், பெண்கள் மருமகளாக குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எழுந்துள்ளது.

மருமகள்கள் தங்களது சக்திக்கு மிகுந்த குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாமியார்களுடன் நெருக்கமாக இருப்பது அந்த பொறுப்புகளை அழுத்தமாக மாற்றுவதாகவும் கூறுகின்றனர்.

4. உன் வாழ்க்கைத்துணை என் குழந்தை

மனைவி தங்கள் வாழ்க்கைத் துணையாக கணவரை பார்க்கிறார். ஆனால் அவரது தாய் வளர்ந்த குழந்தையாகவே தனது மகனைக் கருதுகிறார். அவர்களை வளர்ந்த மனிதர்களாக பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. திருமணத்திற்கு பிறகு இதுவும் ஒரு பிரச்னையாக உருவாகிறது.

மகன் தனது மனைவியால் நன்கு கவனிக்கப்படுகிறான் என்பதை பெற்றோர்கள் ஒரு பிரிவாக எண்ணி கவலைப்படும்போது, மருமகளின் அக்கறை விமர்சனமாக மாறுகிறது.

மனைவி தனது கணவனுக்கு சைவ உணவுகளை நாள்தோறும் பரிமாறும்போது, மகனுக்கு அசைவ உணவுகளை சமைத்துக் கொடுத்ததை எண்ணி தாய் கவலையுறுகிறார்.

இதற்காக மருமகளை விமர்சிக்காமல், மகனிடம் ஏன் சைவம் உண்கிறாய் என்று கேட்கலாம். அதிக கொழுப்புச் சத்து நிறைந்தது என்பதால், உடல்நலன் கருதி சைவ உணவை பரிமாறுவதாக விளக்கம் கொடுக்க மருமகளுக்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்.

5. உறவில் குழந்தைகள் வழங்கும் சலுகை

பேரக்குழந்தைகளை நன்கு கவனித்துக்கொள்வதன் மூலம் மருமகள்/ மருமகனிடம் சுமூகமான உறவு மேம்படுகிறது. மாமியார்களுடன் இணக்கமற்ற உறவைக் கொண்ட மனைவி, பேரக் குழந்தைகளை அவர்களுக்காக அழைத்து வருவது குறைவு. விவாகரத்துக்குப் பிறகு இது மிகவும் குறைந்துவிடும். விவாகரத்துச் சட்டங்கள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது.

சில விவாகரத்தில் பேரக்குழந்தைகளைப் பார்க்க அனுமதி வழங்கப்படும். எழுத்துப்பூர்வமாக இல்லையென்றாலும், விவாகரத்துக்கு பிறகு பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவிட தாத்தா, பாட்டிகளை பெற்றோர்கள் அனுமதிப்பார்கள். திருமண ஒப்பந்தத்தின்படி குழந்தைகள் வளரும் வரை தாத்தா, பாட்டி உறவு இருக்க வேண்டியது நிர்பந்திக்கப்படுகிறது.

6. மாமியார் உறவு எதற்கும் பொருந்தாதது அல்ல

முன்பு இரண்டு மூன்று தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது திருமணம் ஆனதுமே தனிக்குடித்தனம் செல்கின்றனர். வீட்டில் உள்ள மூத்தவர்களையும் உடன் வைத்திருக்க விரும்புவதில்லை. வயதானவர்கள் தங்களது பென்ஷன் தொகையில் வாழ்ந்து வந்தாலும், அனைவரும் சேர்ந்து வாழும்போது 60 சதவிகித செலவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சேர்ந்து வாழ்வது இரு தலைமுறைகளுக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கும் என்றாலும், இது அனைவருக்கும் பொருந்துவதில்லை.  

அப்படி பொருந்தாத பட்சத்தில் மாமியார்-மாமனார் உறவை அடிக்கடி இல்லத்திற்கு வரவேற்கலாம் அல்லது தனி வீடு அமைத்து அவர்களை கண்காணித்துக்கொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு மாமியார் - மாமனார் உறவை பாதுகாப்பது தம்பதிகளுக்கு மிகப்பெரிய கேள்வியாக மாறுகிறது. இதனை திருமணத்திற்கு முன்பு பேசி முடிவு செய்துகொள்வதால் திருமணத்திற்கு பிறகான பிரச்னைகள் குறைக்கலாம்.

7. மாமியார்களின் அதீத அறிவுரை

மாமியார்களின் அறிவுரை கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அவர்கள் குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுவது இல்லை. அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்யவே முயற்சிக்கின்றனர். ஆனால் அது சொல்லப்படுபவர் மற்றும் எடுத்துக்கொள்பவரைப் பொருத்து  எதிர்வினைகளை உருவாக்குகிறது.

பல மருமகள்கள் ஒரே மாதிரியான அறிவுரைகளுக்கு வேறு வேறு வகையில் எதிர்வினையாற்றுவதாக ஆய்வு கூறுகிறது. தனது மாமியார் கூறும் அறிவுரைகளை ஏற்காதவர், தாய் கூறும் அதே அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறார்.

நம் குழந்தையின், குடும்பத்தின் வளர்ச்சியில் நமது பங்கு இல்லையோ என்ற அச்சம் மாமியார்களுக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. இதனால் மருமகள்களால் குடும்பத்தில் நிறைவற்ற தன்மையை அவர்கள் உணருகின்றனர்.

8. சில நேரங்களில் என்னை அணுக வேண்டும்

குடும்பத்தில் மருமகள்/மருமகன் மற்றும் மாமியார்/மாமனார்களுக்கு இடையிலான உறவு வயதாக வயதாக வலுவானதாகவே மாறும். இளமைக்காலத்தைவிட முதுமையில் அவர்கள் உடல் நலனில் அதீத அக்கறை செலுத்தப்படும்.  குடும்ப பொறுப்புகளை பார்த்தது போதும் என்று மாமியார் முடிவு செய்தால், அது மருமகளின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது.

மாமியார்/மருமகள் வார்த்தைகளால் வெளிப்படையாக குடும்பத்தில் உரையாடுவதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. நாம் நமது மகன்/மகளுக்கு எதை போதிக்கிறோமோ அதை நாமும் கடைபிடிக்க வேண்டும்.

9. என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

குழந்தைகள் வளர்ந்தவர்களாகவே இருந்தாலும் அவர்கள் அமைத்துக்கொள்ளும் புதிய உறவு தங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத புதிய உறவை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.    

மகன் மீது அதீத ஈடுபாடுடன் செயல்படுபவர்கள் மருமகளுடன் அத்தகைய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதில்லை.

10. சாக்குபோக்கான பரிசு பரிமாற்றம்

புதிய உறவான மருமகளுடன் அதிகம் பரிட்சயம் இல்லாத காரணத்தால் மாமியார் மருமகளுக்கு வாங்கும் பரிசுப் பொருள்கள் அவரை திருப்தி படுத்தாததாக இருக்கலாம். தலைமுறை இடைவெளியே இதற்குக் காரணம். இந்த விஷயத்தில் பெற்றோர்களும் குற்றவாளிகளாகவே இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு விருப்பமில்லாத பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தவிர்த்துவிடலாம்.

ஆனால், மாமியார்கள் இதுபோன்ற பரிசுப் பொருள்களை எதிர்பார்ப்பவர்கள். கணவர் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பை தெரிந்துகொண்டு அதற்கேற்ப மருமகள்கள் செயல்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT