சிறப்புக் கட்டுரைகள்

அன்னையர் தினம்: அம்மாவுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம்?

கோமதி எம். முத்துமாரி

இன்று அன்னையர் தினம்.. அம்மாவை 'கடவுள் தந்த பரிசு' ன்னு சொல்லிருந்தாலும் இந்த உலகத்த நமக்கு பரிசளித்தது என்னவோ அம்மாதான். ஒவ்வொரு நாளும் அம்மாவ கொண்டாடனும்தான். ஆனா, இன்னைக்கு உலகத்தோட எல்லா அம்மாக்களையும் கொண்டாடணும்.. அம்மா-ன்னாலே எல்லாருக்கும் புடிக்கும்தான். இந்த 'அன்னையர் தினம்' நாள்ல உங்க அம்மாவுக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம், எப்படி சந்தோஷப்படுத்தலாம்னு சில யோசனைகள்.. 

பர்ஸ்ட் உங்க அம்மாவை பத்தி  கொஞ்சம் நேரம் யோசிங்க.. அவங்களுக்கு என்னலாம் புடிக்கும்.. என்னலாம் புடிக்காதுன்னு.. 

பாடல் தொகுப்புகள்

எல்லாருக்குமே துக்கம், சந்தோசம் என எல்லா நேரத்திலும் பாட்டு கேக்குறதுன்னா ரொம்ப புடிக்கும். எல்லா வலிகளையும் மறக்க, சுறுசுறுப்பா வேலை செய்ய பாட்டுகள் ரொம்பவே உதவும்.

குறிப்பாக அம்மாக்கள், வேலை அலுப்பு தெரியக்கூடாதுன்னு பாட்டு கேட்டுகிட்டே வேலை செய்வாங்க.. ஏன் இப்ப இருக்கிற ஜெனெரேஷன் பசங்களுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி பாட்டுலாம் அதிகமாக தெரியும்ன்னாலே அது அம்மாக்களின் அந்த ரேடியோ மூலமாதான். வீட்ல அப்பா வேலைக்கு போன அப்புறம், குழந்தைகள் வெளில போன அப்புறம் அவங்களுக்கு துணையா இருக்குறது அந்த ரேடியோ தான். டிவி இருந்தாலும், ரேடியோ பயன்பாடு அம்மாக்கள்கிட்ட அதிகம். 

அதனால அவங்களுக்கு புடிச்ச பாட்டுகளையெல்லாம் தொகுத்து ஒரு ஆடியோவாக பென் டிரைவ் அல்லது சிடி-ல பதிஞ்சி பரிசா கொடுக்கலாம். அதுக்கும் மேல வேணும்னா பேக்கிரவுன்டு மியூசிக் தெளிவா கேக்குற மாதிரி ஸ்பீக்கர் வைக்கலாம். ஏன் புதுசாகூட ஒரு நவீன ரேடியோ வாங்கிக் குடுக்கலாம். வேற என்ன பொருள்கள் வாங்கித் தந்தாலும் வீட்ல இருக்குற அம்மாக்களுக்கு அந்த ரேடியோ ல பாட்டு கேக்குறதுல என்ன ஒரு தனிசுகம்னு தான் தெரியல.. 

பூச்செண்டுகள், பூக்கள் 

'கிரீட்டிங் கார்டு வித் ஃபிளார்ஸ்' .. ஆமாங்க.. அம்மாவுக்கு எந்த பூ புடிக்குமோ அதுகூட ஒரு கிரீட்டிங் கார்டு சேர்த்து, உங்க லவ்வர்ஸ் கிட்ட எப்படி உணர்ச்சியோட 'லவ் ப்ரொபோஸ்' பண்ணுவீங்களோ, அதைவிட பலமடங்கு பாசத்தோட  அம்மாகிட்ட ஒரு தடவ 'ஐ லவ் யூ' னு சொல்லி பாருங்க... ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் அவங்க வெட்கப்படுறத நீங்க பார்க்கலாம்.. 

கோல்டு திங்ஸ்: 

தங்க நகை புடிக்காத அம்மாக்களே இல்லனு சொல்லலாம்.. அதனால அம்மா  உங்ககிட்ட ' எனக்கு ஒரு செயின் வேணும், கம்மல் வேணும்' ன்னு எப்போவது, ஏதாவது கேட்ருக்காங்களான்னு யோசிச்சு பாருங்க.. உங்கள் பட்ஜெட்க்கு ஏத்த மாதிரி ஒரு மோதிரம் கூட வாங்கிக் குடுக்கலாம்.. எப்படியும் நகைக்காக நாம செலவு பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். அத இந்த நாள்ல உங்க தங்க தேவதைக்கு செய்யுங்க..

சாரீஸ்

தங்க நகை மாதிரியே பெரும்பாலான பெண்களுக்கு 'ட்ரெஸ்' னா ரொம்ப புடிக்கும். இப்போ இருக்குற நவீன அம்மாக்கள் சுடிதாரும் போடுறாங்க.. சிலருக்கு எப்போவுமே 'சேரீ' தான். வீட்ல 2 பீரோ முழுசா சேலை வச்சுருந்தாலும் புதுசா வாங்க அவங்க கண்ணு தேடும்.. 

சமீபத்தில உங்ககூட கடைக்கு போறப்ப, 'இந்த சேரீ நல்லா இருக்கு, அந்த சேரீ நல்லா இருக்கு' னு சொல்லிருப்பாங்க.. அப்படி ஏதாச்சும் இருந்தா அதை வாங்கலாம். அப்படி இல்லனாலும் உங்க அம்மாவோட டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி அவங்க மறக்க முடியாத அளவுக்கு ஒரு சேரீ வாங்கிக்கொடுங்க.. எப்ப அந்த சேரீ-ய கட்டுனாலும்  என் பொண்ணு/பையன் வாங்கி கொடுத்தாங்கன்னு பெருசா பெருமையா சொல்லிக்குவாங்க.. 

கிட்சன் ஐட்டம்ஸ்

அம்மாவுக்கும் சமையலறைக்கும் இருக்குற ஒரு பந்தமே தனி தான்.. என்ன தான் இந்த காலத்துல 'ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை' னு பேசினாலும், அலுவலகத்துல வேலை செஞ்சுட்டு வீட்லயும் வேலை செய்யுறது பெரும்பாலா பெண்கள்தான். கிட்சன்ல ஆணுக்கும், பொண்ணுக்கும் சரிசமமா வேலை இருக்கும்னு சொல்ற காலம் வர 100 வருஷம் கூட ஆகலாம்.. 

அதனால வீட்ல எப்போவுமே வேலை செஞ்சுகிட்டு இருக்கிற உங்க அம்மாவுக்கு அவங்க வேலைய ஈஸியா ஆக்குற மாதிரி ஏதாவது பொருள் வாங்கிக்கொடுக்கலாம்.. பெரும்பாலான நடுத்தர, ஏழை குடும்பத்தில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் கூட இல்லாம தான் வாழ்க்கை ஓடுது.. அப்படி வாங்கிக்குடுக்க முடியாதவங்க கிட்சன் ஐட்டம்ஸ்ல எதாவது அவங்க விரும்புறத வாங்கித் குடுக்கலாம். 

கிஃப்ட்ஸ் & மேக்அப் திங்ஸ்: முன்னாடி காலத்தை விட இப்போ நெறைய அம்மாக்கள் வேலைக்கு போறாங்க.. பெரிய துறைலலாம் இருக்காங்க.. சோ கண்டிப்பா கொஞ்சமாவது மேக்அப் திங்ஸ் யூஸ் பண்றவங்களா இருப்பாங்க.. அதனால மேக்அப்- ல இன்ட்ரெஸ்ட் இருக்குறவங்களுக்கு அதுமாதிரியான பொருள் வாங்கித்தரலாம்.. அப்படியே இல்லாட்டாலும் உங்க அம்மாவுக்கு  மேக்அப் கிட் வாங்கிக்கொடுத்த கண்டிப்பா யூஸ் பண்ணாம இருக்க மாட்டாங்க.. வெளில போரப்பவாது அவங்களே கண்டிப்பா ட்ரை பண்ணுவாங்க.. நம்ம அம்மா எப்போவுமே அழகு தான்.. இன்னும் கொஞ்சம் அழகா இருக்கட்டுமே...

போட்டோ கலெக்ஷன்ஸ் & ட்ராயிங்: இப்போ போட்டோவை விட ரியல் ட்ராயிங்ல ஒரு உயிர்ப்பு இருக்குறதா எல்லாரும் நினைக்குறாங்க.. அதனாலா அம்மா வோட போட்டோவை வரைஞ்சு அவங்களுக்கு பரிசா கொடுக்கலாம்.. உங்களுக்கு வரைய தெரியாட்டாலும் ஓவியரின் மூலமா பொன்நகைக்கு இணையாகாத ஒரு புன்னகை கலந்த அவங்க போட்டோவை வரைஞ்சு பரிசு கொடுங்க.. கண்டிப்பா எஸ்சைட் ஆவாங்க..

அப்படிஇல்லனா, அவங்க சின்ன வயசுல இருந்து  இதுவரைக்கும்  இருக்கிற போட்டோஸ் ல பெஸ்ட் போட்டோஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி ஆல்பம் வச்சு கொடுக்கலாம்.. அவங்க வருஷ காலத்துக்கும் அந்த போட்டோவை எல்லாம் பாத்துட்டு மலரும் நினைவுகளுக்கு ஒரு பயணம் போய்ட்டு வருவாங்க.. 

அம்மாவுக்கு ஒரு லெட்டர்:

என்ன இது.. நம்ம லவ் லெட்டர் தான கேள்வி பட்ருப்போம்.. ஒரே வீட்ல இருந்துகிட்டு அம்மாவுக்கு லெட்டரானு யோசிக்காதீங்க.. செஞ்சு பாருங்க.. 

லெட்டர் ரெண்டு விதமா எழுதலாம்.. ஒன்னு.. உங்க அம்மா கூட இருந்த நாட்கள்-ல நடந்த சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து எழுதி அனுப்பலாம்.. 'அந்த சூழ்நிலையில அம்மா இல்லனா என்னால மீண்டு வரவே முடியாது'-ன்ற ஒரு நிகழ்வை அவங்களுக்கு சுட்டிக்காட்டி, 'வாழ்கை பூராவும் நீங்க இருக்குற வரைக்கும் எனக்கு கவலை இல்லன்னு' அவங்களுக்கு சொல்லலாம்.. அவங்கள பத்தி ஒரு கவிதையாக கூட எழுதி கொடுக்கலாம்.. 

இன்னொன்னு..பல நேரங்கள்ல வீட்ல அம்மாவ திட்டிருப்போம், அத நெனச்சு அவங்க வருத்தப்பட்ருப்பாங்க.. (அத மனசுல வச்சுக்க மாட்டாங்க..அது வேற விஷயம்) முக்கியமா பொண்ணுங்க, அப்பா கூட சேர்ந்துக்கிட்டு அம்மாவை வெறுப்பேத்துறதுலாம் நடக்கும்.. 

எப்போவாச்சும் உங்க அம்மாவை நீங்க காயப்படுத்திருந்தா அவங்களுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு லெட்டர் எழுதி கொடுங்க.. அவங்கள திட்டினாலும், வெறுப்பேத்துனாலும் அவங்கள எவ்ளோ புடிக்கும் னு அதுல எழுதி குடுங்க..

அவுட்டிங்: இப்போ கரோனா சூழ்நிலைல அவுட்டிங் அப்டின்றது அசாதாரணமான விஷயம்.. அதனால இன்னைக்கு முடிஞ்சா பக்கத்துல அவங்க பிரண்டு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. அவங்க பக்கத்து வீட்டு தோழிகளோட கொஞ்சம் நேரம் செலவிட வையுங்க.. 

ஸ்பெஷல் டின்னர்:  கடைசியா அவங்க மறக்க முடியாத அளவுக்கு ஒரு ஸ்பெஷல் டின்னர் ரெடி பண்ணலாம்.. கல்யாணம் பண்றதுல இருந்து கடைசி வரைக்கும் அம்மான்னா சமையல் னு ஆயிடுச்சு.. அதனால ஒரு நாள் கூட வேணாம், ஒரு நேரம் மட்டும்.. அதாவது லன்ச் அல்லது டின்னர் நீங்க ரெடி பண்ணி குடுங்க.. 

இப்போ இருக்குற நிலைமல ஹோட்டல் கூட்டிட்டு போக முடியாததுனால வீட்ல சாப்பாடு ரெடி பண்ணி முதல் ஆளா அவங்கள உட்கார வச்சு சாப்பாடு போடுங்க.. ஏன் முடிஞ்சா அம்மாவுக்கு நீங்க சாப்பாடு ஊட்டி விடுங்க. 

தினமும் உங்கள உட்கார வச்சு சாப்பாடு பரிமாறுனவங்களுக்கு இன்னைக்கு நீங்க பரிமாறுங்க... எல்லா நாளும் உழைக்கிற அவங்களுக்கு ஒருநாள் சமையல்ல இருந்து ஓய்வு கொடுக்கலாமே.. 

உங்களுக்கு தெரிஞ்ச வேற ஐடியாக்கள கீழே கமெண்ட் பண்ணுங்க..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT