சிறப்புக் கட்டுரைகள்

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்! அதற்கு முன் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வீர்

தென்னிலவன்.க

2021 சட்டப்பேரவை தேர்தல் திருவிழா தமிழகம் முழுவதும் கலைக்கட்ட துவங்கியுள்ளது.

எப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் இப்போதே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என கரோனா காலத்திலும் தேர்தல் திருவிழா கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றனர்.

குறிப்பாக அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார கூட்டங்களில் பங்கேற்க வருவோரில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது கிடையாது. கரோனா என்ற பெருஞ்தொற்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்த உலகையும் சுமார் 6 மாதங்கள் முடக்கிப்போட்டது.  

தற்போது வரை பள்ளி கல்லூரிகள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 100% திறப்புக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு 50% மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

இப்படி இருக்க பிரசார கூட்டங்கள் மட்டும் எந்த தடையுமின்றி ஜமாப் மேளங்களுடனும், பெரும் கூட்டத்துடன் கோலாகளமாக நடந்து வருகிறது. ஆளும் கட்சி , எதிர் கட்சி, புதிய கட்சி, எதுவாக இருந்தாலும் பிரசார கொண்டாடத்தில் மாற்றம் இல்லை.

பிரசார கூட்டங்களில் பேசும் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டு, அறிவிப்புகளை வெளியிட்டாலும் 5 ரூபாய் முகக்கவசம் அணிய வலியுறுத்த தவறுகின்றனர்.

எதையெல்லாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில்  வலியுறுத்தியதோ அதற்கு எதிரான விஷயங்களை எந்த மாற்றங்களும் இல்லாமல் செய்து வருகிறோம், சமூக இடைவெளி, கூட்டம் கூடுதல், கட்டாய முகக்கவசம் அனைத்திலும்.

3 மாதங்களுக்கு பின் நடைபெற உள்ள தேர்தலுக்கு இப்போதே பிரசாரம் மேற்கொண்டு வரும் அரசியல் கட்சியினர் வழக்கமான பிரசார முறைகளில் சில மாற்றங்களை செய்து, பயிற்சி முறையிலாவது நடைமுறைபடுத்த முயன்றால், எதிர்பாராதவிதமாக பெருந்தொற்று அதிகாரித்தாலும் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

சித்திப்பீர் வாக்களிப்பீர் அதற்கு முன் தற்காத்து கொள்வீர் என்ற வாசகத்தையாவது பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

SCROLL FOR NEXT