சிறப்புக் கட்டுரைகள்

பெண்களை அவமதிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை புறக்கணியுங்கள்

1st Apr 2021 04:57 AM

ADVERTISEMENT

 

விருதுநகர்: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத்  தேர்தலில், பெண்களை அவமதிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள்  புறக்கணிக்க வேண்டும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  கூறினார்.

விருதுநகர் அல்லம்பட்டி சந்திப்பு சாலையில் இத்தொகுதி பாஜக வேட்பாளர் ஜி. பாண்டுரங்கனை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்  கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

உத்தர பிரதேசத்திலிருந்து புண்ணிய பூமியான தமிழகத்துக்கு வந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். பாரத நாட்டில் சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் சாதுக்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியாவில் அனைத்து பண்பாடுகள், கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த கலாசாரம், பண்பாடுகளை உலக நாடுகளில் உரக்கப் பேசி வருகிறார் பிரதமர் மோடி.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக,  தமாகா  வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.

மத்தியில் கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பல கிராமங்களில் மின்சாரம் கூட கிடைக்கவில்லை. தற்போதைய மத்திய பாஜக அரசு, அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குதல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும்.

மத்திய பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு அவசியம். அதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் ஊழல், ரெளடியிசம், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்திருந்தன. எனவே, பெண்களை அவதிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும்.

விருதுநகரில் சர்வதேச அளவில் பல்கலைக்கழகம், விளையாட்டு மைதானம், இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்படும் என்றார்.

முன்னதாக, பாஜக மாவட்டத் தலைவர் கஜேந்திரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங், பாஜக மாநில பொதுச்  செயலர் ராம சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT