சிறப்புக் கட்டுரைகள்

'புற்றுநோய் சிகிச்சையில் ஹோமியோ மருத்துவத்தின் அணுகுமுறை'

டாக்டர் கோ. பிரேமா

 

உலகமயமாக்கல் தொடங்கி, வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி, களைக்கொல்லி, தொழில் வளர்ச்சி வரை அனுதினமும் ஏற்படும் மாற்றங்களால் பல புற்றுநோய்க் காரணிகள் நம் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக மாறிக்கொண்டே வருகின்றன.

உணவு, நீர் மட்டுமல்ல, நாம் வீட்டில் சாதாரணமாக உபயோகிக்கும் கொசுவிரட்டியிலிருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் உபயோகப்படுத்தும் நாப்கின்கள் வரை, தடுப்பூசி முதற்கொண்டு புற்றுநோய்க் காரணிகளை நம்மிடம் சேர்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றுடன் மன அழுத்தமும் முக்கிய காரணமாகும்.

இக்காரணிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். இவற்றிலிருந்து மக்கள் தற்காத்துக்கொள்ள வழிகாட்டுதலும் அவசியமாகும். 

இங்கும் தடுப்பூசியா என்றால், ஓர் உதாரணம்.

1965 முதல் 1973 வரை இடைப்பட்ட 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வெளிவந்த போலியோ சொட்டுமருந்துகளில் எஸ்வி40 எனப்படும் புற்றுநோய்க் காரணி கலப்படமானதை உலக சுகாதார நிறுவனம் மற்றும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஒப்புக்கொள்கிறது. ஆனாலும், இப்புற்றுநோய் காரணியானது பரிசோதனை விலங்குகளில் போல் மனிதர்களுக்கும் புற்றுநோய்க் கட்டிகளை உண்டு செய்கிறதா என்பதில் இன்றளவும் குழப்பமான ஆய்வுத் தகவல்கள் மாறி மாறி வருகின்றன.

இது இந்த நிறுவனங்கள் மற்றும் ஆய்வுகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. பொதுவாகவே, தடுப்பூசிகளின் உட்பொருட்களில் பல புற்றுநோய்க் காரணிகள் உண்டு. தடுப்பூசியின் முக்கிய பாதகங்களில் ஒன்று ஆட்டோ இம்யூன். இதுவும் புற்றுநோய் வடிவமாக மாற வாய்ப்புகள் உண்டு.

இன்று புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் உடல்நலத்திற்கு மிகவும் தீங்கான புகையிலையை, 1950-70களில் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதென்றும், கர்ப்பிணிகள் வரை இவற்றைப் புகைக்க வேண்டும் எனவும் பல ஆய்வுபூர்வமான கட்டுரைகள் வந்ததுண்டு. இதையும் அன்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் சி.டி.சி. ஆகியன அங்கீகரித்திருந்தன. பல புகையிலை நிறுவனங்களின் விளம்பரங்களில் மருத்துவர்களே இதை வழிமொழிந்த வரலாறும் உண்டு.

பின்னர்தான் புகையிலை புகைப்பதன் ஆபத்து அங்கீகரிக்கப்பட்டுத் தவறான முடிவுகள் உள்ள ஆய்வுகள் நீக்கப்பட்டன. ஆகையால், ஆய்வுகள் எப்போதும் எந்த நிரந்தரமான உறுதியையும் தரப்போவதில்லை. இவற்றையும் எப்போதும்  மக்கள் கேள்விக்குள்படுத்த வேண்டும். 

புற்றுநோயில் பல வகைகள் உண்டு. பாதிக்கும் உறுப்புகளைப் பொருத்தும் இதன் தீவிரத்தன்மை மாறுபடுகிறது. 

புற்றுநோய் மரணங்களில் சரிபாதி, நோய் முற்றல் அல்லாமல் இதற்காக அலோபதியில் அளிக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையினாலேயே ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

புற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சிகள் பல நடந்து வருகின்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டியவை இரண்டு உண்டு. ஒன்று மஞ்சளின் குர்குமின். மற்றொன்று தட்டம்மை, போலியோ போன்ற நோய்களின் காரணியான கிருமிகள். ஆம். நோய் உண்டாக்கும் என அஞ்சப்படும் கிருமிகள். இவற்றை நேரடியாகவோ அல்லது இந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் இருக்க வைப்பதாலோ புற்றுநோய்  பாதிக்கப்பட்டவர்களிடம் வியத்தகு மாற்றம் ஏற்படுவதை இன்று ஒரு வெற்றிகரமான சிகிச்சை முறையாக மருத்துவ வல்லுநர்கள் தொடர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பொதுவாகவே, அலோபதி ஒன்று மட்டும்தான் அறிவியற்பூர்வமானது என்றும்,‌ மரபுவழி இயற்கை மருத்துவ முறைகளை அறிவியற்பூர்வமானதன்று என்றும் இவற்றைத் தட்டிக்கழிக்கும் போக்கு பரவலாக இருக்கிறது.

நாம் நினைவில் கொள்ளவேண்டியது யாதெனில், எந்த ஒரு மருத்துவத் துறையும் ஒற்றையாக சமூகத்தின் மருத்துவத் தேவை அனைத்தையும் என்றும் பூர்த்தி செய்துவிட முடியாது. எனில், இந்நோய்க்கு மரபு வழி இயற்கை மருத்துவ முறைகளில் என்ன வழி உள்ளது என்ற கேள்வி எழலாம். 

கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய்ப் பிரிவின், ஓய்வுபெற்ற மூத்த பேராசிரியரான டாக்டர் சி.பி. மேத்யூவின் கடிதம் ஒன்று சமீபத்தில் எனக்கு ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

8/8/2020 தேதியிட்ட அக்கடிதத்தில் அவர், திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தின் தலைமை மருத்துவருக்கு இப்படியாக ஓர் எச்சரிக்கை விடுக்கிறார். அங்கு புற்றுநோய்க்கு அலோபதி சிகிச்சை பெற்றுவந்த மூவருக்கு சிகிச்சை பலனளிக்காததால், இவர்கள் குணமடைய வாய்ப்பில்லை, இனி பேலியேசன் எனப்படும் வலி நிவாரண சிகிச்சை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் கைவிட்ட நிலையில், இவரது மருத்துவக் கண்காணிப்பில் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற மரபுவழி மருத்துவச் சிகிச்சையில் புற்றுநோயிலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். 

இதுபோன்ற பல அலோபதி மருத்துவர்கள் மரபுவழி மருத்துவ முறைகளைத் தழுவுவது ஒன்றும் புதிதல்ல. அதிலும், ஹோமியோபதியில் பெயர்பெற்ற பலர் அடிப்படையில் அலோபதி மருத்துவராக இருப்பர். இவர்களில் புற்றுநோய்க்கென சிறப்புப் பயிற்சி புரியும் மருத்துவர்களும் உண்டு. எனக்கு ஆச்சரியம் அளித்தது இதுவல்ல.

அக்கடிதத்தில் அந்த மூத்த பேராசிரியர், புற்றுநோயைக் குணமாக்கும் சிகிச்சை மரபுவழி இயற்கை மருத்துவ முறைகளில் இருக்கும்பொழுது, அலோபதி சிகிச்சை மட்டுமே பலனளிக்கவில்லை என்பதால் அவர்களைக் கைவிட்டது மருத்துவ ‍‍‍‌அறமன்று, இது கிரிமினல் குற்றமாகும் என்றும் மருத்துவப் புறக்கணிப்பு என்றும் மிகக் கடுமையாகச் சாடியிருந்தார் டாக்டர் மேத்யூ.

இந்த நேரத்தில் மற்றுமொரு தகவல். 2019 ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் நடந்த ஹோமியோபதி மத்திய சபை மசோதாவிற்கான ஆதரவுக் கூட்டத்தில், மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர், அபரூபா போடார், தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அவரை ஹோமியோபதி முழுமையாக குணமாக்கியதைப் பற்றி பேசி, ஹோமியோபதிக்கு தனது ஆதரவைத் தந்திருந்தார்.

சரி, புற்றுநோய் சிகிச்சையில் ஹோமியோபதியின் பங்கு என்ன?

புற்றுநோய் உறுப்பு மற்றும் தன்மை, அந்த நபரது தனித்தன்மையைப் பொருத்து சிகிச்சைப் பலன்கள் மாறுபடும். முழுவதும் குணமாக்கல், நோயின் தீவிரத்தன்மையை மட்டுப்படுத்தல், ஆயுளை அதிகப்படுத்துதல், வாழ்வியலை இலகுவாக்குதல், கடைசியாக பேலியேசன் வலி நிவாரணி, கீமோதெரபியின் பாதிப்பிலிருந்து நலமீட்டல் என பல்வேறு விதமாக ஹோமியோபதி துணை நிற்க இயலும். 

ஹோமியோபதி என்பது அடிப்படையில் ஒருவரது தனித்தன்மையை ஆராய்ந்து, அவரது உடல், மன ஆரோக்கியத்திற்கு ஒத்த,  வீரியமாக்கப்பட்ட,  ஒற்றை மருந்து மூலம் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை முறை ஆகும். ஆகையால், ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் தேவைப்படும். இந்நோய்க்கு இம்மருந்து என எவருக்கும் பொதுவான மருந்து என்று ஒன்றைச் சொல்ல இயலாது. ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தில்லை. நோயாளிக்கே மருந்து என்ற கூற்று முற்றிலும் உண்மை.

எனது தனிப்பட்ட கடந்த 14 ஆண்டு கால ஹோமியோபதி சிகிச்சை அனுபவங்களில் புற்றுநோயும் உண்டு. அதில் மாறுபட்ட சிகிச்சை தேவைகள் மற்றும் பலன்கள் மறுக்க முடியாதது. 

53 வயது ஆண், குடல் புற்றுநோய். அறுவைச் சிகிச்சை செய்து  6 மாதங்கள்  கழித்து பரிசோதனையில் புற்றுநோய் செல்கள் இடுப்பு எலும்புகளுக்குப் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில்  அவருக்கு ஆயுள்காலமும் நிர்ணயிக்கப்பட்டது.

மருந்துகள் எதுவும் இனி பலனளிக்காது என மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தின் அழுத்தம் காரணமாக, ஹோமியோபதி சிகிச்சைக்கு சிவகாசியிலிருந்து திண்டுக்கல் வரை வந்திருந்தார். உடல்ரீதியாக சில அசௌகரியங்கள் இருப்பினும் நோய் பற்றிய கவலையோ, மரணத்தை பற்றிய பயமோ அவருக்கு இல்லை. ஒரு தந்தையாகத் தனது குடும்பத்திற்கு அவர் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றிய  கவலை, ஒரு தலைவராக (கவுன்சிலர்) மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையை மீண்டும் மீண்டும் நினைவுகொண்டிருந்தார்.

இது அவரது (நோயிலும்) தனித்துவமான குணமாகும். இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஹோமியோபதி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுள்காலத்தைத் தாண்டி 3 ஆண்டுகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போதும் தனது பணிகளை எந்தத் தொய்வும் இல்லாமல், உடல் மன புத்துணர்ச்சியோடு செய்து வந்தார். அதற்குப் பின் உடல் தொந்தரவு ஏற்பட்டால் மட்டும் வந்தால் போதுமென சிகிச்சை நிறைவடைந்தது.

34 வயதான பள்ளி ஆசிரியை. இரண்டு சிறு குழந்தைகளின் தாய். விழுப்புரம் மாவட்டத்தில் பணி.  பெரோடிட் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை முடிந்து கீமோதெரபி முழுவதும் முடிக்க முடியவில்லை. புற்றுநோய் செல்களும் அருகில் பரவிவிட்டன. அடுத்த கட்டம் எதுவும் சொல்ல இயலாத நிலை. பேலியெசன் தெரபி மட்டுமே தீர்வு என முடிவு சொல்லப்பட்ட நிலை. பணி விடுத்து சொந்த ஊர் திரும்பியிருந்தார்.

சேலத்தில் ஹோமியோபதி சிகிச்சைக்காக வந்தார். வாய் திறக்க முடியாமல் வலி. ஆனாலும் மாறாத ஒரு மென்சிரிப்பு. எந்தப் பதற்றமும் பயமும் இல்லை. நேரடியான நேர்மையான பார்வை. அமைதியாகத் தீர்க்கமாக முடிவெடுக்கும் குணம். இவரது தனித்தன்மையைப் பொருத்து சிகிச்சை அளித்ததில் வலி வெகுவாக குறைந்து வாய் திறக்க முடிகிறது. சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் குடும்பத்தையும் கவனித்து, மீண்டும் ஆசிரியப் பணிக்குச் செல்கிறார். 

இதுபோன்ற சில அனுபவங்களில் எது ஹோமியோபதி சிகிச்சையின் வெற்றி, எது தோல்வி என எவ்வாறு அறுதியிட்டுச் சொல்வது? ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முற்றிலும் குணமாகுதல்தான் வெற்றியாக இருக்க வேண்டும் என்றில்லை. 

எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான ஓர் அனுபவம். அப்போது நான் பயிற்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் இருக்கலாம். திண்டுக்கல்லில் பிற்படுத்தப்பட்ட பெண்கள் விடுதி ஒன்றில் பள்ளிக் குழந்தைகளுக்கு அந்நிறுவனத் தலைவரின் அழைப்பில் மாதமொருமுறை சில மாதங்கள் இலவச ஹோமியோபதி சிகிச்சை அளித்து வந்த நேரம்.

ஒருமுறை ஒரு 8 வயது குழந்தை, மிஸ் ஊருல, எங்க தாத்தாவுக்கு நோவு. சாகப் போறாருன்னு சொல்றாங்க. அவருக்கு மருந்து தருவீங்களா என அழுது கொண்டே கேட்டாள். சிறுகுழந்தையின் மனதுக்கு ஆறுதலாக இருக்க வேண்டி, உங்க தாத்தாவை நேரில் பார்த்துதான் சிகிச்சை அளிக்க முடியும். வீட்டில் சொல்லி இந்த முகவரிக்கு வரச்சொல்லுங்க என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். விடுதியில் இருக்கும் சிறு குழந்தையின் பரிந்துரையில் எவரும் வருவார்கள் என சற்றும் நினைக்கவில்லை.

ஆனால் இரண்டு நாள்களில் ஒரு வேனில் 8 நபர்கள் வாசலில் வந்து இறங்கினார்கள். வாகனத்தில் பெரியவர் ஒருவர் முனகலோடு படுத்தபடி இருந்தார்.

வயிற்றில் புற்றுநோய் முற்றிய நிலையில், புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இன்னும் ஒரு வாரமே ஆயுள்காலம் நிர்ணயிக்கப்பட்டவரை அழைத்து வந்திருந்தனர். வலி நிவாரணிகூட இனி பலனில்லை என் கைவிடப்பட்ட நிலை.  அவருக்கு சரியாக நினைவுகள் இல்லை. 

ஒரு வாரமாக வலியில் அனத்திக்கொண்டே இருக்கிறார். எப்போதும் முனகல்தான். ஒரு நிமிடம்கூட உறங்குவதில்லை.

ஒரு சொட்டு நீர்கூட நாக்கில் பட்டால் எரிகிறது என்று எதையும் மறுக்கிறார்.  குடும்பத்தில் அனைவரையும் அருகிலேயே ஒரு வாரமாக இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்றார்கள். வயிறு இரண்டு கால்பந்து அளவிற்கு நிறைமாத கர்ப்பிணியின் வயிறு போல இரத்த நாளங்கள் புடைக்கப் பெருத்திருந்தது.

வாகனத்திலேயே அவர் படுத்த நிலையில். என்ன செய்கிறது என்று கேட்டேன். எரிகிறது. உடம்பெங்கும் தீயாய் எரிகிறது. எப்போது வேண்டுமானாலும் மரணித்துவிடுவேன். அனைவரும் என் அருகிலேயே இருக்க வேண்டும். இதை மட்டும்தான் அவரால் மெல்லிய குரலில் சொல்ல முடிந்தது.

இந்த உடல் மற்றும்  மனக்குறிகளின் தனித்தன்மையின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுத்துவிட்டு, அதிகபட்சம் அவருக்கு வலி,  அனத்தல், மரண பயம் நீங்கி, நிர்ணயிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இருக்கிறவரை மன அமைதியோடு இருக்க இம்மருந்து உதவும் எனச் சொல்லி அனுப்பினேன். 25 நாள்கள் கழித்து மீண்டும் கும்பலாக வந்தமர்ந்தனர்.

"ஒரு வாரத்தில் அப்பா இறந்துவிட்டார். நேற்று காரியம் முடித்த கையோடு இன்று உங்களைச் சந்திக்க வந்துள்ளோம் என்றனர். உண்மையை சொல்லவேண்டுமெனில் அப்போது எனக்கு சற்று பதற்றமாகிவிட்டது. சற்றுநேர மௌனத்திற்கு பிறகு, மருந்து எடுத்த சில நிமிடங்களில் இருந்தே அவருக்கு எரிச்சல் குறைந்து அனத்தல் நின்றது. எழுந்து உட்கார முடிந்தது. நீர் அருந்தினார். பின் உணவு கேட்டு உண்டார். அவரால் உணவு, நீர் நாக்கில்பட முடிந்தது. சற்று மன அமைதியுடனும் மகிழ்ச்சியாகவும் எங்களோடு பேசினார். உறக்கம் இருந்தது. குடும்ப விஷயங்களில் சில வழிகாட்டுதல்களைச் சொன்னார். ஒரு வாரம் வரை இதுபோல் எங்களோடு மகிழ்ச்சியாக இருந்தார். இறப்பிற்கு இரண்டு மணி நேரம் முன் மீண்டும் எரிச்சல். ஆனால் பதற்றமில்லை. அமைதியாக உயிர் பிரிந்தார்.

இது நாங்கள் சற்றும் எதிர்பார்க்காதது. இறப்பு தவிர்க்க முடியாதது. ஆனால் கடைசி நேரத்திலும் பதற்றமோ பயமோ வலியோ இல்லாமல் அமைதியாக மகிழ்வுடன் இருந்தார்.

இப்படி ஒரு நல்மரணத்தைக்கூட அவருக்கு கொடுக்க முடியாதோ என நாங்கள் கவலைப்பட்டதுண்டு. அவரது இறுதி நாள்களில் அமைதியும் மகிழ்ச்சியும் தந்த உங்களது சிகிச்சைக்கு நன்றி" எனக் கூறி விடைபெற்றனர்.

எனது மருத்துவப் பயிற்சியின் மறக்க முடியாத வெற்றி என்று சொல்ல வேண்டுமென்றால் இதுவாகத்தான் இருக்கும்.

இங்கே எந்த மாயமந்திரமும் நடக்கவில்லை. மரணப் படுக்கையில் இருந்தவர் துள்ளி எழவில்லை. வீங்கிய வயிறு வற்றவில்லை. குறிப்பிட்ட காலத்தில் இறந்தும்போனார். ஆனால் இருக்கிற காலத்தில் உடல், மன அமைதியுடன் இருந்தார். இதுவே சிகிச்சையின் வெற்றியாகப் பார்க்கிறேன். மருத்துவருக்கு கல்லூரியைவிட, மருத்துவ நூல்களைவிட, கற்றறிந்த பேராசிரியர்களைவிட சிறந்த ஆசிரியர் எப்போதும் சிகிச்சை வேண்டிவரும் நலவிழைவர்களே. 

புற்றுநோய்க்கு ஒரே மாதியான சிகிச்சை பலன் இருப்பதில்லை. ஆயினும் ஒவ்வொருக்கும் ஏதோ ஒருவகையில் ஹோமியோபதியும் நிச்சயம் கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றை ஆய்வுகளில் கண்டுபிடிக்க முடியாது. உங்கள் அருகிலேயே நல்ல ஹோமியோபதியரை  கண்டுபிடியுங்கள். நல்ல ஹோமியோபதி மருத்துவர் யார்?  அவர்,  நலவிழைவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் தனித்தன்மையின்  அடிப்படையில் ஒத்த, வீரியமாக்கப்பட்ட ஒற்றை மருந்து கொடுப்பவராக இருப்பார். நல்ல ஹோமியோபதி மருத்துவரின் வழிகாட்டுதலில் புற்றுநோயையும் வெல்ல முடியும்.

(ஹோமியோபதி மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்  டாக்டர் கோ. பிரேமா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT