சிறப்புக் கட்டுரைகள்

வாழ்க்கையில் இரண்டு வகை மக்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர்! யார் அவர்கள்?

25th Oct 2019 10:58 AM | ஷக்தி

ADVERTISEMENT

ஒரு தியேட்டரில் நாடகம் நடக்கும் போது, நீங்கள் முன் இருக்கைகளைத் தேர்வு செய்கிறீர்கள். அதுவே ஒரு திரைப்படம் திரையிடப்படும் போது நீங்கள் கடைசி இருக்கைகளைத் தேர்வு செய்வீர்கள். வாழ்க்கையில் உங்கள் நிலை மாறக் கூடியதுதான். எதுவும் நிரந்தரம் அல்ல. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம். அனைவருமே எதைத் தேடியோ அதி விரைவாக ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். நின்று நிதானத்து எதற்கு இந்த வேகம் என்று யோசித்துப் பாருங்கள். உண்மை என்பது எப்போதும் மறைபொருளாகத்தான் இருக்கும். அதைத் தேடிப் போனால் மட்டுமே விளங்கும்.

வாழ்க்கையில் இரண்டு வகை மக்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளனர்: ஒன்று பைத்தியம் மற்றொன்று குழந்தைகள். எனவே ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் அதில் பைத்தியமாக இருங்கள். ஒரு குழந்தை போல சந்தோஷமாக இருங்கள். வாழ்க்கையில் நீங்கள் அடைந்ததை பத்திரப்படுத்தக் கற்றுக் கொண்டு, வாழ்க்கையை அனுபவித்து விடுங்கள்!

சோப்பு தயாரிக்க, எண்ணெய் தேவை. ஆனால் எண்ணெயை போக்க மறுபடியும் சோப்புதான் தேவை. இதுதான் வாழ்க்கையின் முரண்பாடு. இந்த சூட்சுமத்தை உணர்ந்து வாழ்ந்தால் வெற்றி அடையலாம்.

உங்களைக் கட்டிப்பிடிக்கவோ அல்லது உங்கள் தோளைத் தட்டிக் கொடுக்கவோ யாரையும் எதிர்ப்பார்க்காதீர்கள். உங்களுக்காக அழவும் சிரிக்கவும் ஆட்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு நாள் இல்லை ஒரு நாள், தூர விலகிச் சென்று விடுவார்கள். பிரிவும் மரணமும் மனித வாழ்க்கையில் நிழலெனத் தொடரும் விஷயங்கள். பிரியமானவர்கள்தான் அதிகக் காயங்களை ஏற்படுத்துவார்கள். ஆனால் அதற்காக நீங்கள் அழது கொண்டிருக்கக் கூடாது. உங்களை உண்மையாக நேசிப்பவர்களுக்காக நீங்கள் உங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான். எனவே உங்களை மிகவும் நேசிப்பவர்களுடன் வாழ்ந்து மகிழுங்கள். பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால் பணத்தினால் உறவுகளை புரிந்து கொள்ள முடியாது காரணம், சில முதலீடுகள் ஒருபோதும் லாபத்தை அளிக்காது, ஆனால் அவை நம்மை பணக்காரர்களாக ஆக்குகின்றன!

வாழ்க்கை வாழ்வதற்கே! அனுபவதித்து ரசித்து, நாம் யார் எதற்காக இந்த பிறவியை எடுத்துள்ளோம் என்பதைப் பற்றி எப்போதாவது சிந்தித்து, தெளிந்து நிலையான மகிழ்ச்சியை கண்டடைவதே வாழ்க்கைப் பயன் என்பதை அறிந்து தெளிவோம்.

Tags : life is beautiful tips for happy life
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT