'10-ல் 6 காங்கிரஸ்' பணக்கார வேட்பாளர்களின் பட்டியல் இதோ!

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களின் விவரங்கள் ஏடிஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
'10-ல் 6 காங்கிரஸ்' பணக்கார வேட்பாளர்களின் பட்டியல் இதோ!

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களின் விவரங்கள் ஏடிஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 இடங்களை காங்கிரஸ் வேட்பாளர்கள் பிடித்துள்ளனர்.

அதிக சொத்து மதிப்பு கொண்ட முதல் 10 வேட்பாளர்களின் விவரம் பின்வருமாறு:

1. ரமேஷ் குமார் ஷர்மா - பிகார் - பாடலிபுத்திரா தொகுதி - ஐஎன்டி கட்சி - அசையும் சொத்து ரூ.7,08,33,190 கோடி, அசையா சொத்து ரூ.11,00,50,00,000 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.11,07,58,33,190 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.1,107 கோடி உயர்ந்துள்ளது.

2. கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி - தெலங்கானா - செவல்லே தொகுதி - காங்கிரஸ் - அசையும் சொத்து ரூ.8,56,38,18,770 கோடி, அசையா சொத்து ரூ.38,63,60,400 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.8,95,01,79,170 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.895 கோடி உயர்ந்துள்ளது.

3. நகுல் நாத் - மத்தியப் பிரதேசம் - சிந்த்வாரா தொகுதி - காங்கிரஸ் - அசையும் சொத்து ரூ.6,18,41,72,757 கோடி, அசையா சொத்து ரூ.41,77,74,000 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.6,60,19,46,757 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.660 கோடி உயர்ந்துள்ளது.

4. ஹெச்.வசந்த்குமார் - தமிழகம் - கன்னியாகுமரி - காங்கிரஸ் - அசையும் சொத்து ரூ.2,30,49,30,444 கோடி, அசையா சொத்து ரூ.1,87,00,00,000 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.4,17,49,30,444 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.417 கோடி உயர்ந்துள்ளது.

5. ஜோதிர்தியா எம்.சிந்தியா - மத்தியப் பிரதேசம் - குணா தொகுதி - காங்கிரஸ் - அசையும் சொத்து மதிப்பு ரூ.45,58,00,245 கோடி, அசையா சொத்து ரூ.3,28,98,18,500 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.3,74,56,18,500 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.374 கோடி உயர்ந்துள்ளது.

6. பிரசாத் வீரா பொட்லூரி - ஆந்திரம் - விஜயவாடா தொகுதி - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - அசையும் சொத்து ரூ.2,36,29,66,326 கோடி, அசையா சொத்து ரூ.1,11,46,50,000 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.3,47,76,16,326 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.347 கோடி உயர்ந்துள்ளது.

7. உதய் சிங் - பிகார் - புரிணா தொகுதி - காங்கிரஸ் - அசையும் சொத்து ரூ.1,15,91,64,170 கோடி, அசையா சொத்து ரூ.2,25,94,79,800 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.3,41,86,43,970 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.341 கோடி உயர்ந்துள்ளது.

8. டி.கே.சுரேஷ் - கர்நாடகா - பெங்களூரு தொகுதி - காங்கிரஸ் - அசையும் சொத்து ரூ.33,30,03,790 கோடி, அசையா சொத்து ரூ.3,05,59,16,927 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.3,38,89,20,717 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.338 கோடி உயர்ந்துள்ளது.

9. கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு - ஆந்திரம் - நர்சாபுரம் தொகுதி - ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் - அசையும் சொத்து ரூ.1,98,90,22,378 கோடி, அசையா சொத்து ரூ.1,27,03,83,000 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.3,25,94,05,378 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.325 கோடி உயர்ந்துள்ளது.

10. ஜெயதேவ் கல்லா - ஆந்திரம் - குண்டூர் தொகுதி - தெலுங்கு தேசம் - அசையும் சொத்து ரூ.1,67,62,49,990 கோடி, அசையா சொத்து ரூ.1,37,52,35,252 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.3,05,14,85,242 கோடி ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.305 கோடி உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com