திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்புகழ் ‘பழம்பெரும் ராஜதந்திரி’ என் ஜி ஐய்யங்காரின் மறைவை ஒட்டி தினமணியில் வெளிவந்த இரங்கல் செய்திப் பகிர்வு!

By கார்த்திகா வாசுதேவன்| DIN | Published: 07th August 2019 04:34 PM

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்கிய தஞ்சை என் கோபால்சாமி ஐய்யங்கார் குறித்து நேற்றைய தினம் ஊடகங்கள் நினைவு கூர்ந்தன. பாரதப் பிரதமராக பண்டித நேரு இருந்த காலகட்டத்தில் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளும் திறமையான அரசியல் தலைவராக அடையாளம் காணப்பட்டவர் என் ஜி ஐய்யங்கார். அவருக்கும் நேருவுக்குமான நட்பு என்பது மிக மிக ஆத்மார்த்தமானது. அதனால் தான் என் ஜி ஐய்யங்காரின் மறைவை ஒட்டி நேரு வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ‘அவரது மறைவு எனக்கு நேர்ந்த சொந்த இழப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துணை புகழ் வாய்ந்த திறமையாளர்களை இந்திய அரசியல் அரங்கில் மீண்டும் அடையாளம் காண்பதென்பது சற்றுக் கடினமான காரியம் தான்.

நேரு, ராஜாஜி உள்ளிட்டோரின் இரங்கல் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்...

என் ஜி அய்யங்காரின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கும் போது அவரெடுத்த முடிவுகள் அனைத்துமே மிக்க ராஜதந்திரம் நிறைந்தவையாக இருந்ததோடு நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : N G AIYYANGAR TRIBUTE PAGE TO N G AIYYANGAR DINAMANI DATED 1954 என் ஜி ஐய்யங்கார் பழம்பெரும் ராஜதந்திரி நினைவுப் பகிர்வு

More from the section

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்!
தத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு
தனித்துவம் மிகுந்ததாக ஆக்கப்படுமா: அரியலூர் பாசில் அருங்காட்சியகம்?
துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன?
"ஒரே தேசம், ஒரே கட்சி" யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்: யாருக்கான எச்சரிக்கை இது?