வியாழக்கிழமை 23 மே 2019

குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!

By ENS| Published: 22nd April 2019 02:55 PM

 

2008ம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது.

மத்திய நிலத்தடி நீர் ஆதார வாரியத்தின் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 85% குறைந்துவிட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். நகரமயமாதல், பொய்யாகிப் போன பருவ மழை, நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுதல் போன்றவையே இதற்குக் காரணம்.

அதாவது 2008ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு, மே மாதத்துக்குப் பின்பு என பருவ மழைக்கு முன்னும், பின்னும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டத்தின் அளவோடு தற்போது ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்ட அளவு 85% குறைந்துள்ளது.

நகரமயமாதல் அதிகரிக்கும் போது நிலப்பரப்பு குறைகிறது. இதனால் மழை பெய்தாலும் கூட நிலத்தடி நீர் பூமிக்குள் இறங்குவதற்கான வாய்ப்புக் குறைந்து போகிறது.

மத்திய சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 2-4 மீட்டர் அளவுக்குக் குறைந்துள்ளது.

கடந்த பருவ மழை காலத்துக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டான்குளத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே நிலத்தடி நீர் 71% அளவுக்கு உயர்ந்தது. இதைத் தவிர திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தே உள்ளது.

பொதுவாக பருவ மழைக் காலத்துக்குப் பிறகு நிலத்தடி நீர்மட்டமானது 100% ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அதுவும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே 71% ஆக உயர்ந்தது. 2017ம் ஆண்டு கடும் வறட்சி காலத்தில் கூட நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு 91% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வெயிலை நேசிப்போம் !
வாக்கு எண்ணிக்கை என்பது எப்படி நடக்கும்? உங்களுக்கிருக்கும் சந்தேகங்களுக்கு இதோ பதில்
தேர்தல் தேவதைகள்...! தேர்தல் பணி நேரத்தில் தேடி வந்த  புகழ்...!
 முதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாமில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
மருத்துவக் கழிவுகள் வெளியேற்றம்: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆய்வு