விருதுநகர்

அனுப்பன்குளத்தில் ரூ. 1.83 கோடியில் புதிய மின்மாற்றி காணொலி காட்சி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

19th May 2023 11:53 PM

ADVERTISEMENT

சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் ரூ.1.83 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் ஒரு மின் மாற்றி மட்டுமே இருந்து வந்தது. இதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மாற்றுவழியில் மின் விநியோகம் செய்யவதில் சிரமம் இருந்து வந்தது. இதனால், இங்கு கூடுதலாக ஒரு மின் மாற்றி அமைக்க வேண்டும் என மின் வாரியத்தினா் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், தற்போது இந்த துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி ரூ. 1.83 கோடியில் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சாத்தூா் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முத்துலட்சுமி, துணைத் தலைவா் விவேகன்ராஜ், மின் வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT